ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

குளிக்கும் படத்தை தோழிக்கு அனுப்பிய இளம்பெண் - வில்லங்கத்தில் முடிந்த விளையாட்டு

குளிக்கும் படத்தை தோழிக்கு அனுப்பிய இளம்பெண் - வில்லங்கத்தில் முடிந்த விளையாட்டு

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

இளம்பெண் ஒருவர் குளிப்பதை செல்போனில் படம் பிடித்து அதை தனது நெருங்கிய தோழிக்கு அனுப்பி வில்லங்கத்தை விலைக்கொடுத்து வாங்கிக்கொண்டார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

    கன்னியாகுமரில் இளம்பெண் ஒருவர் தோழிக்கு அனுப்பிய குளியல் புகைப்படம் பிரச்னையில் முடிந்துள்ளது.

    கன்னியாகுமரி மாவட்டம் கருக்கல் காவல்நிலையத்தில் இளம்பெண் ஒருவர் தோழி மற்றும் தோழியின் நண்பன் மீது புகார் கொடுத்துள்ளார். கருக்கல் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் தனது தோழியுடன் மிகவும் நெருங்கிப்பழகி வந்துள்ளார்.சிறு வயது முதலே பழக்கம் என்பதால் அவர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார். இந்த இளம்பெண் ஒருநாள் தான் குளிப்பதை விளையாட்டுத்தனமாக போனில் படம் பிடித்துள்ளார். அந்த காட்சிகளை அவர் உடனே டெலிட் செய்திருந்தால் எந்த வில்லங்கமும் வந்திருக்காது.

    செல்போனில் படம் பிடித்ததை தனது நெருங்கிய தோழிக்கு அனுப்பியுள்ளார். அவர் அதனை பார்த்துவிட்டு டெலிட் செய்துவிடுவார் என நினைத்துள்ளார். ஆனால்  அந்தப்பெண்ணோ தனது தோழியின் அந்தரங்கப்படம் எனத் தெரிந்தும் அதனை தனது ஆண் நன்பரான ஜாக்சன் என்பவருக்கு அனுப்பியுள்ளார்.  இதனையடுத்து அந்தப்பெண்ணுக்கு தேவையில்லாத பிரச்னைகள் எழுத் தொடங்கியது.

    Also Read:  மாணவிகள் முன்பு பைக் சாகசத்தில் ஈடுபட்ட ரோமியோக்களை தேடும் போலீஸ்

    ஜாக்சன் அந்த புகைப்படத்தை காட்டி அந்தப்பெண்ணுக்கு தொல்லை கொடுக்க தொடங்கியுள்ளனர். இதனைக்கேள்விப்பட்டு அந்தப்பெண் அதிர்ச்சியடைந்துள்ளார் மேலும் ஜாக்சனிடம் கடுமையான நடந்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக அந்தப்படத்தை  அவர் வேறு சிலருக்கு அனுப்பியதாக தெரிகிறது. நாளுக்கு நாள் அந்தப்பெண்ணுக்கு தொல்லை அதிகரித்தது. இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

    இதனையடுத்து அந்தப்பெண் கருக்கல் காவல்நிலையத்தில் இதுதொடர்பாக புகார் அளித்தார். இளம்பெண் அளித்த புகாரின் பேரில் தோழி, அவரது நண்பர் ஜாக்சன் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Published by:Ramprasath H
    First published:

    Tags: Crime News, Kanyakumari, Photo, Woman