Home /News /tamil-nadu /

2 குழந்தைகளை நீரில் மூழ்கவைத்து கொன்றுவிட்டு இளம்பெண் தற்கொலை.. கன்னியாகுமரியில் பரபரப்பு

2 குழந்தைகளை நீரில் மூழ்கவைத்து கொன்றுவிட்டு இளம்பெண் தற்கொலை.. கன்னியாகுமரியில் பரபரப்பு

கன்னியாகுமரி பெண் தற்கொலை

கன்னியாகுமரி பெண் தற்கொலை

கன்னியாகுமரியில் இரண்டு குழந்தைகளையும் கொன்று தாய் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை அருகே 2 குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் அழுத்தி கொலை செய்துவிட்டு பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே கழுவன்திட்டை காலனி பகுதியைச் சேர்ந்தவர் விஜி. பட்டதாரியான இவர் ஜெபர்ஷைன் என்பவரை திருமணம் செய்துள்ளார். ஜெபர்ஷைன் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள  சுற்றுலா தலமான வர்க்கலையில் உள்ள ரிசார்ட்டில் வேலை பார்த்து வருகிறார். மாதத்திற்கு ஒருமுறை விடுமுறைக்கு வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். இதன் காரணமாக விஜி தனது தாயார் மற்றும் மாமியாருடன் 2 வயது மற்றும் 6 மாத இரண்டு பெண் குழந்தைகளுடன்  குழித்துறையில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.

    Also Read: மனைவியின் முன்னாள் காதலனை சரமாரியாக வெட்டிக்கொன்ற கணவன் - திண்டுக்கல்லில் அதிர்ச்சி சம்பவம்

    இந்த நிலையில் நேற்று மதியம் விஜி தனது தாயாரை அருகில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்துக்கு சென்றுவருமாறு கூறி அனுப்பி உள்ளார். அவர் சென்ற உடன் மாமியாரையும் கடைக்கு பொருட்கள் வாங்கி வர அனுப்பி உள்ளார். அவர்கள் இருவரும் வீட்டைவிட்டு சென்றதும் குழந்தைகளுடன் தனிமையில் இருந்த விஜி தனது இரண்டு குழந்தைகளையும்  வீட்டருகேயுள்ள தண்ணீர் தொட்டியில் நிரப்பி வைத்திருந்த  தண்ணீரில் மூழ்க வைத்து கொலை செய்துள்ளார். குழந்தைகள் இரண்டும் இறந்ததை உறுதிபடுத்திக் கொண்ட விஜி வீட்டினுள் சென்று அறையினுள் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    இந்த நிலையில் தேவாலயத்திற்கு சென்றிருந்த தாயார் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது இரண்டு குழந்தைகளும் தண்ணீர் தொட்டிக்குள் இறந்த நிலையில் கிடந்துள்ளன. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தாயார் வீட்டினுள் சென்று பார்த்த போது மகள் விஜியும் தூக்கில் தொங்கியபடி இறந்த நிலையில் இருந்துள்ளார்.

    Also Read: தேர்தல் பிரச்னையில் திமுக வட்ட செயலாளர் கொலையா? - தனிப்படை அமைத்து போலீஸ் விசாரணை

    இதனைக்கண்டு கதறி அழுத தாயார் சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்துள்ளனர்.  இந்த சம்பவம் குறித்து மார்த்தாண்டம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மார்த்தாண்டம் போலீஸார் மற்றும் தக்கலை டிஎஸ்பி கணேசன் ஆகியோர் வந்து விசாரணை மேற்கொண்டு. தாய் மற்றும் இரண்டு குழந்தைகளின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இரண்டு குழந்தைகளையும் கொன்று தாய் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குழித்துறை பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    செய்தியாளர்: சஜயகுமார் (கன்னியாகுமரி)

    மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

     
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Commit suicide, Crime News, Death, Kanyakumari, Murder, Tamilnadu

    அடுத்த செய்தி