வாட்ஸ் அப் வீடியோ அழைப்பில் ஆபாசமாக தோன்றிய இளம்பெண்ணை பார்த்த கன்னியாகுமரி வாலிபருக்கு மிரட்டல்.
சமூகவலைத்தளங்களில் நாளுக்கு நாள் மோசடிகள் அதிகரித்து வருகிறது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப் போன்ற சமூகவலைத்தளங்களில் நண்பர்களுடன் சாட்டிங் செய்யும் போது திடீரென ஆபாச விளம்பரங்கள் செல்போன் திரையில் எட்டிப்பார்க்கும். இதில் கவனம் செலுத்தாமல் கடந்துபோனால் எந்த பிரச்னையும் இல்லை. சிலர் ஆர்வக்கோளாறு காரணமாக அந்த லிங்கில் சென்றால் கவர்ச்சியான பெயரில் விதவிதமான பெண்களின் புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கும். அந்த லிங்க் -களில் சென்றால் பின்னால் பிரச்னைகள் தான் ஏற்படும்.
Also Read: குளிக்கும் படத்தை தோழிக்கு அனுப்பிய இளம்பெண் - வில்லங்கத்தில் முடிந்த விளையாட்டு
வாட்ஸ்அப்பில் அது போல் தெரியாத எண்களில் இருந்து hi என வரும் மெஜேச்களுக்கு ரீப்ளை செய்தால் வில்லங்கத்தை விலைக்கொடுத்த வாங்க வேண்டியிருக்கும். கன்னியாகுமரியை மாவட்டம் முளகுமூடு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இப்படியான பிரச்னையில் சிக்கி காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
இளைஞரின் செல்போனுக்கு தெரியாத எண்ணில் இருந்து வாட்ஸ் அப் கால் வந்துள்ளது. யார் என தெரியாமல் குழப்பத்தில் போனை எடுத்துள்ளார். அப்போது இளம்பெண் ஒருவர் வீடியோ காலில் ஆபசமாக தோண்றியுள்ளார். அந்த இளைஞர் என்னவென்று புரியாமல் இருந்த நிலையில் அதனை அந்தப்பெண் கால் ரெக்கார்ட் செய்துள்ளார். அதன்பின் அந்த அழைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
Also Read: லாட்ஜில் நிர்வாண கோலத்தில் பெண் மர்ம மரணம் - கள்ளக்காதலனிடம் ஏற்காடு போலீஸ் விசாரணை
சிறிது நேரத்தில் அந்த வீடியோவை ஆபாசமாக எடிட் செய்து அந்த இளைஞரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்பியுள்ளார். இதனைக்கண்டதும் அந்த இளைஞர் அதிர்ச்சியடைந்துள்ளார். வேறு ஒரு எண்ணில் இருந்து அழைத்து அந்த இளைஞரிடம் பணம் கேட்டு ஒரு கும்பல் மிரட்டத் தொடங்கியது.
நாங்கள் கேட்ட பணத்தை கொடுக்கவில்லை என்றால் வீடியோவை சமூகவலைதளத்தில் பரப்பி உன் மானத்தை வாங்கிவிடுவோம் என மிரட்டல் தொணியில் பேசியுள்ளார். இதுகுறித்து அந்த நபர் நாகர்கோவில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார். சைபர் க்ரைம் போலீஸார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cheating, Crime | குற்றச் செய்திகள், Video calls, WhatsApp, Woman, Youths