ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

Tamil nadu election results 2021| கன்னியாகுமரி மக்களைவை இடைத்தேர்தலில் வெற்றிப் பெறப்போவது யார்?

Tamil nadu election results 2021| கன்னியாகுமரி மக்களைவை இடைத்தேர்தலில் வெற்றிப் பெறப்போவது யார்?

வாக்கு இயந்திரம்

வாக்கு இயந்திரம்

முதல் தேர்தலிலேயே மூத்த தலைவரான பொன்.ராதாகிருஷ்ணனை எதிர்த்துப் போட்டியிடும் வாய்ப்பு விஜய் வசந்துக்குக் கிடைத்தது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை எட்டு மணிக்கு துவங்கியுள்ளது. கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையும் துவங்கியுள்ளது.

  கன்னியாகுமரி மக்களவை தொகுதி உறுப்பினராக செயல்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின் வசந்தகுமார் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது உயிரிழப்பையடுத்து கன்னியாகுமரி மக்களவை தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, தமிழக சட்டமன்ற தேர்தலுடன் சேர்த்து கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

  இதையடுத்து, திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு கன்னியாகுமரி மக்களவை தொகுதி ஒதுக்கப்பட்டிருந்தது. அங்கு காங்கிரஸ் வேட்பாளராக விஜய் வசந்த் அறிவிக்கப்பட்டார். விஜய் வசந்த் மறைந்த வசந்தகுமாரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல், அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாஜகவுக்கு கன்னியாகுமரி மக்களவை தொகுதி ஒதுக்கப்பட்டது. அங்கு பாஜக வேட்பாளராக பொன்.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார். மக்கள் நீதி மய்யம் கூட்டணி வேட்பாளராக சுபா சார்லஸ், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அனிட்டர் ஆல்வின் உள்ளிட்டோர் அறிவிக்கப்பட்டனர்.

  சட்டசபை தேர்தலுடன் கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கும், இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால், அங்கு அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டன. கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலை பொறுத்தவரை மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சி வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும், பொன்.ராதாகிருஷ்ணனுக்கும், விஜய் வசந்துக்கும் இடையே தான் நேரடி போட்டி.

  இது பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடும் 9-வது நாடாளுமன்றத் தேர்தல். இதற்கு முன்பு எட்டு முறை போட்டியிட்ட அவர் இரண்டு முறை வெற்றிபெற்றிருக்கிறார். வசந்தகுமார் மறைந்த பின்னர் கட்சியில் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு குறுகியகாலத்தில் மக்கள் மத்தியில் விஜய் வசந்த் அறிமுகமாகியுள்ளார். முதல் தேர்தலிலேயே மூத்த தலைவரான பொன்.ராதாகிருஷ்ணனை எதிர்த்துப் போட்டியிடும் வாய்ப்பு விஜய் வசந்துக்குக் கிடைத்தது.

  தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புகளின்படி, கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் விஜய் வசந்த் வெற்றி பெறுவார் என பல முடிவுகள் கூறியுள்ளன. எனினும், இன்னும் சற்று நேரத்தில் வாக்கு முன்னிலை நிலவரம் தெரிந்துவிடும், தொடர்ந்து இன்று மாலையே யார் வெற்றிபெறுவார்கள் என்ற இறுதி முடிவும் தெரிந்துவிடும்.

  Published by:Esakki Raja
  First published:

  Tags: Kannyakumari, TN Assembly Election 2021