கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் பேருந்து நிலையத்தில் காவல்துறை அதிகாரியுடன் மல்லுக்கட்டிய போதை ஆசாமியின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் காலை மாலை நேரங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும். இதனால் அங்கு காவல்துறை அதிகாரிகளும் போலீசாரும் ரோந்து செல்வது வழக்கம். அவ்வாறு அங்கு காவல்துறை அதிகாரி ஒருவர் ரோந்து சென்றபோது குடிபோதையில் காணப்பட்ட ஒருவர் ரகளையில் ஈடுபட்டு கொண்டு இருந்தார். காவல்துறை அதிகாரி அவரை எச்சரிக்கை செய்தார். இதனையடுத்து காவல்துறை அதிகாரியிடம் போதை ஆசாமி மல்லு கட்டினார்.
நீண்ட நேரமாக காவலரும் அவரை சமாதானம் செய்ய முற்பட்டும் முடியாமல் அங்கிருந்து சென்ற நிலையில், போதை ஆசாமி மீண்டும் ரகளையில் ஈடுபட்டு கொண்டிருந்தார். இதனால் அங்கிருந்த போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் போதை ஆசாமியை சுற்றி வளைத்து நையப் புடைத்தனர். பொதுமக்களின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாத போதை ஆசாமி கீழே விழுந்தார். இந்த சம்பவத்தை அங்கு நின்று கொண்டிருந்த சில இளைஞர்கள் வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
செய்தியாளர்: ஐ.சரவணன் ( நாகர்கோவில்)
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.