கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரள எல்லை பகுதியான கொல்லங்கோடு அருகே மேடவிளாகம் பகுதியில் உள்ள இறைச்சி கோழி கடையில் ஊழியர் ஒருவர் கோழி ஒன்றை உயிரோடு துடி துடிக்க அறுத்து துன்புறுத்தும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இந்த கொடூர செயலில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரள எல்லை பகுதியான கொல்லங்கோடு மேடவிளாகம் பகுதியில் அமைந்துள்ள ஒரு இறைச்சி கோழி கடையில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் இறைச்சி கோழி ஒன்றை துன்புறுத்தும் நோக்கில் உயிரோடு துடி துடிக்க அறுத்து இறைச்சியாக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்தது.
இந்த கடையில் இறைச்சி வாங்க வந்த ஒருவர் தனது மொபைல் போனில் பதிவு செய்த வீடியோ காட்சியில் எந்த மனவருத்தமும் இல்லாமல் மிகவும் குரூரமாகச் சிரித்துக்கொண்டே மகிழ்ச்சியுடன் இந்தக் கொடூரத்தைச் செய்திருக்கிறார் அந்த இளைஞன். இறைச்சிக் கடைகளில் கோழியின் தலையை துண்டித்து உயிர் போன பிறகு தோல் உரிக்கப்பட்டு இறைச்சி துண்டுகளாக வெட்டப்படுவது வழக்கம். ஆனால் அந்த வாலிபர் இரக்கமே இல்லாமல் மொபைல் போனை பார்த்து சிரித்து கொண்டே இந்த கொடூரத்தை காட்டியுள்ளார்.
இதையும் படியுங்கள் | யாசகம் கேட்ட முதியவரை குளிப்பாட்டி உணவு வழங்கிய காவல் அதிகாரி..! கேரளாவில் நெகிழ்ச்சி சம்பவம்..
உயிருடன் தோலை உரித்து துடிக்க துடிக்க துண்டு துண்டாக வெட்டும் போது கோழி கதறி அழுவதும், துடி துடிப்பதும் இந்த காட்சிகளில் பதிவாகி உள்ளது. அவர் இங்கு தொடர்ந்து இந்த கொடூர குற்றத்தை செய்வதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த வீடியோவை பார்த்த பலரும் தங்களது ஆதங்கத்தை தெரிவித்தும் இந்த இரக்கமற்ற செயலை செய்யும் நபரை போலீசார் உடனடியாக கைது செய்ய கேட்டும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்துள்ளனர்.
இந்த சம்பவம் குமரி எல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இந்த வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து தமிழக ,கேரளா எல்லை பகுதியான செங்கவிளை பகுதியை சேர்ந்த மனு ( 36 ) என்பவரை விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கொல்லங்கோடு போலீசார் கைது செய்து உள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kanyakumari, Viral Video