கன்னியாகுமரி மாவட்டத்தில் மேக் கோடு, வேளிமலை, பொன்மனை, சுருளக்கோடு, சித்திரங்கோடு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை தொடர் வேகமாக அழிக்கப்பட்டு வருகிறது.
இரவு பகல் பாராமல் கனரக இயந்திரங்கள் உதவியுடன் மலைகள் உடைத்து கடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, அனுமதி இன்றி உடைக்கப்படும் மலைகள் தினமும் நூற்றுக்கணக்கான லாரிகளில் கேரளாவுக்கு கடத்தப்படுகிறது. இதனால் குமரி மாவட்டத்தில் இயற்கை வளம் வேகமாக அழிவதுடன் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.
இதனை தடுக்க வலியுறுத்தி பல்வேறு தரப்பினர் தொடர் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சித்திரன்கோட்டில் செயல்பட்டு வரும் கல் குவாரியின் அருகாமையில் அந்தப் பகுதியில் உள்ள ஊர் மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
Must Read : 15 ஆண்டுகளாக மின்சாரம், குடிநீர் வசதி இன்றி தவிக்கும் அரசு பள்ளி மாணவர்கள் - நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
இந்த ஆர்ப்பாட்டத்தில் உடனடியாக குமரியில் சட்டவிரோதமாக இயங்கிவரும் கல் குவாரிகளை மூடி கனிம வளம் கொள்ளையை தடுத்து மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.