கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் பெருக்கெடுத்த வெள்ளத்தின் அளவு குறைந்தது. வெள்ளப் பெருக்கால் துண்டிக்கப்பட்ட இரண்டு முக்கியச் சாலைகளில் மீண்டும் போக்குவரத்து துவங்கியது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக அணைகளின் நீர்வரத்து அதிகரித்தது தொடர்ந்து நேற்று முன்தினம் அணைகளில் இருந்து அதிகபட்சமாக 40 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
இதனால் கோதையாறு, பழையாறு, பரளியாறு, தாமிரபரணி ஆறு ஆகிய பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது இதனால் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. மாவட்டத்தில் குழித்துறை தேங்காய்பட்டணம் புதுக்கடை நித்திரவிளை குழித்துறை அருமனை உட்பட எட்டுக்கு மேற்பட்ட முக்கிய சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
மழையின் அளவு குறைந்து அதைத்தொடர்ந்து அணைகளிலிருந்து உபரி நீர் திறக்கும் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டுகுளித்துறை தேங்காய்ப்பட்டினம்குளித்துறை அருமனை சாலையில் தண்ணீர் வடிந்து போக்குவரத்து துவங்கியுள்ளது.
தற்பொழுது பேச்சிப்பாறை அணையிலிருந்து வினாடிக்கு 6,239கன அடி தண்ணீரும் பெருஞ்சாணி அணையில் இருந்து வினாடிக்கு 6039 கன அடி தண்ணீரும் சிற்றார் ஒன்றி அணையிலிருந்து வினாடிக்கு 534கன அடி தண்ணீரும் திறந்துவிடப்படுகிறது.
மழை வெள்ளம் காரணமாக திற்பரப்பு அருவியில் பெரும் வெள்ளம் வந்து கொண்டிருந்தது. தற்போது இந்த வெள்ளம் குறைந்துள்ளது. கல் மண்டபத்தின் கீழ் பகுதியை தாண்டி மட்டுமே தற்போது தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.
Must Read : வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... தமிழ்நாட்டிற்கு கனமழைக்கு வாய்ப்பு
மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை விட்டு விட்டு பெய்து வருவதால் ஆற்றோரப் பகுதிகளில் வெள்ளம் ஓரளவிற்கே வடிந்துள்ளது.
செய்தியாளர் - சஜயகுமார், கன்னியாகுமரி. இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.