கன்னியாகுமரி மாவட்டத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு குறித்து , மின்வாரிய அலுவலகத்தின் அதிகாரி அலட்சியமாக பதில் அளிக்கும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை தொடர்ந்து அறிவிக்கபடாத மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள். வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்ததால் நோயாளிகள், குழந்தைகள் பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் மின் விசிறி இயக்க முடியாமல் புழுக்கத்தில் தவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிய ஒருவர் களியக்காவிளை மின்வாரிய அலுவலகத்தின் சேவை கட்டுபாட்டு அறைக்கு போன் செய்து கேட்டபோது அங்கு பணியில் இருந்த ஊழியர் அலட்சியமாக பதில் அளித்ததோடு அமைச்சருக்குதான் தெரியும் அவர்தான் செல்வார் எங்களுக்கு தெரியாது என்று பதில் அளிக்கும் ஆடியோ தற்போது சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த தொலைபேசி உரையாடலில் பேசிய ஊழியர் மொத்தமாக எங்கயும் மின்சாரம் இல்லை. இதுகுறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. அமைச்சரிடம் கேட்டால் தான் என்ன காரணம் என சரியாக சொல்லுவார்கள். என கூறியுள்ளார். இந்த ஆடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ALSO READ | பேருந்து ஆட்டோ கட்டண உயர்வுக்கு அமைச்சரவை ஒப்புதல்... மே 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது...
இதே போன்று தமிழகத்தின் சில மாவட்டங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு இருந்து வருகின்றது. கரூர் மாவட்டத்தில் நகரப்புறங்களில் ஒரு மணிநேரத்திற்கு மேலாகவும், கிராமப்புறங்களில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் பாதிப்பு அடைந்து வருகின்றனர்.
தமிழகத்தில் தொடர்ந்து வரும் மின்வெட்டு தொடர்பாக தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் அளித்து விளக்கம் கொடுத்திருந்தார். அதில் மின்பற்றாக்குறையை சமாளிக்க நமது வாரியத்தின் உற்பத்தித்திறனை உடனடியாக அதிகரித்தும் தனியாரிடமிருந்து கொள்முதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Power cut