ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

Suresh Gopi | 'திரிசூர் பூரம் நிகழ்ச்சியில் வான வேடிக்கை நடத்த அனுமதி' - மாநிலங்களவை முன்னாள் எம்.பி சுரேஷ் கோபி பெருமிதம்

Suresh Gopi | 'திரிசூர் பூரம் நிகழ்ச்சியில் வான வேடிக்கை நடத்த அனுமதி' - மாநிலங்களவை முன்னாள் எம்.பி சுரேஷ் கோபி பெருமிதம்

 முன்னாள் எம்.பி சுரேஷ் கோபி

முன்னாள் எம்.பி சுரேஷ் கோபி

Thrissur Pooram 2022 : பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் அடங்கிய நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்த வான வேடிக்கை நடத்த வேண்டும் என மத்திய அரசின் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. பூரத்தை விரும்புபவர்கள் அனைவரும்  எந்த குறைபாடும் இல்லாமல் அதன் முழு நிறைவுடன் இனி  பூரத்தை அழகாக பார்க்கலாம் என திருச்சூரில் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

கேரளா மாநிலத்தில் உலக புகழ்பெற்ற திரிசூர் பூரம் நிகழ்ச்சியை வானவேடிக்கையுடன் நடத்த மத்திய அரசு அனுமதி தந்துள்ளது என சுரேஷ் கோபி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

கேரளா மாநிலம் திரிசூர் மாவட்டத்தில் ஆண்டு தோறும் உலக பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் நிகழ்ச்சி நடைபெறும். இந்த நிகழ்ச்சியை காண கேரளா மக்கள் மட்டும் அல்லாது இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் கூட்டம் வருவர். வெளிநாடுகளில் இருந்தும் இந்நிகழ்ச்சியை காண பல்லாயிரக்கணக்கான மக்கள் திரள்வது வழக்கம்.

இந்த நிகழ்ச்சியில் மக்களை கவரும் விதம் பிரமாண்டமான வான வேடிக்கை வழக்கமாக இடம் பெறும்.  இந்த வான வேடிக்கை நடத்த  மத்திய அரசின் ஏஜென்சியான பேசோவிடம் அனுமதி பெற வேண்டும். தற்போது இந்த ஆண்டும் இதற்கான அனுமதி கிடைத்துள்ளதற்கு மாநிலங்களவை முன்னாள் எம்.பி சுரேஷ் கோபி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சுரேஷ் கோபி தெரிவித்துள்ளதாவது , பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் அடங்கிய நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்த வான வேடிக்கை நடத்த வேண்டும் என மத்திய அரசின் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியா சென்றிருந்த மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சரான பியூஷ் கோயல் நள்ளிரவு 12.30  மணியளவில்  இதற்கான அனுமதி வழங்கி  கையெழுத்திட்டுள்ளார். பாறமேக்காவு தேவஸ்தானத்தின்  கோரிக்கையின் பேரில் இந்த அனுமதியை பெற முயற்சி மேற்கொண்டதாக அவர் கூறியுள்ளார்.

ALSO READ | தமிழ்நாடு சாய்பாபா பக்தர்களுக்கு நற்செய்தி - மீண்டும் தொடங்குகிறது ஷீரடி ரயில்சேவை

 மேலும் பூரத்தை விரும்புபவர்கள் அனைவரும்  எந்த குறைபாடும் இல்லாமல் அதன் முழு நிறைவுடன் இனி  பூரத்தை அழகாக பார்க்கலாம் என திருச்சூரில் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.

திருச்சூர் பூரம் மே 10ம் தேதி நடைபெற உள்ளது. மே 11-ஆம் தேதி அதிகாலையில்  முக்கிய நிகழ்வான வான வேடிக்கை நடைபெறும். கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவிட் பரவல் காரணமாக திரிசூர்  பூரம் விழாவை அனைத்து விதமான சடங்குகளுடன் முழுமையாக கொண்டாட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் : சஜயகுமார் தனஜெயன் நாயர்

Published by:Sankaravadivoo G
First published:

Tags: Actor Suresh Gopi, Thrissur