இட்டகவேலி ஶ்ரீ நீலகேசி அம்மன் கோவில் தூக்கத்திருவிழாவில் தமிழகம் மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
குமரி மாவட்டத்தில் பச்சிளம் குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நடத்தப்படும் கோவில்களில் ஒன்றான இட்டகவேலி ஶ்ரீ நீலகேசி அம்மன் கோவில் தூக்கத்திருவிழா கடந்த 23ம் தேதி கோலாகலமாக கொடியேற்றத்துடன் துவங்கியது.இந்நிலையில் விழாவின் 7ஆம் திருவிழா நாளான நேற்று பச்சிளம் குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை திருவிழா நடத்தப்பட்டது. முன்னதாக கோவிலில் வழிபடும் அம்மன்கள் மூன்று பேரும் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பந்தலில் எழுந்தருளினர்.
Read More : குமரி இட்டகவேலி ஶ்ரீ நீலகேசி அம்மன் கோவில்... 155 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை விழா (படங்கள்)
தொடர்ந்து தூக்க தேரில் பொருத்தப்பட்டிருந்த இரண்டு வில்லுகளில் நான்கு தூக்கக்காரர்கள் பச்சிளம் குழந்தைகளை தூக்கி வானுயுர உயர்ந்தபடி நிற்கும் தேரை பக்தர்கள் கூடி இழுத்து கோவிலை சுற்றி ஒருமுறை வலம் வைத்து தூக்க நேர்ச்சையை முடித்து வைத்தனர்.
Must Read : கன்னியாகுமரியில் சுற்றித்திரிந்த வெளிநாட்டு சிறுவன்.. உ.பி.யில் இருந்து தனியாக ரயில் ஏறிவந்தது விசாரணையில் தகவல்..
இந்த வருடம் 155 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நடத்தப்பட்டது. இதில் தமிழகம் மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் ஆசி பெற்று சென்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.