முகப்பு /செய்தி /தமிழ்நாடு / “ஹிஜாப் தனிமனித சுதந்திரம்“ தமிழக கம்யூனிஸ்ட் வேட்பாளர்களை ஆதரித்து திருவனந்தபுரம் இளம்மேயர் பிரச்சாரம்

“ஹிஜாப் தனிமனித சுதந்திரம்“ தமிழக கம்யூனிஸ்ட் வேட்பாளர்களை ஆதரித்து திருவனந்தபுரம் இளம்மேயர் பிரச்சாரம்

ஆரியா ராஜேந்திரன்

ஆரியா ராஜேந்திரன்

Local Body Election 2022: கேரளா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு  அரசியல் எதிரியான  காங்கிரஸுடன் தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணியில் உள்ளது தொடர்பாக  செய்தியாளர்கள் கேள்விக்கு,   கேரளாவில் உள்ள அரசியல் சூழ்நிலை அல்ல தமிழகத்தில். அந்தந்த மாநிலத்திற்கு ஏற்றவாறு அரசியல் நிலைபாடு மாறுபடும் என்று ஆரியா ராஜேந்திரன் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும் ...
  • 1-MIN READ
  • Last Updated :

கன்னியாகுமரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மாநகராட்சியைச் சேர்ந்த இளம் வயது மேயரான ஆரியா ராஜேந்திரன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, ஹிஜாப் சர்ச்சை விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த அவர் தனிமனித சுதந்திரங்களை  பறிக்கக்கூடாது என்பது தான் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைபாடு என தெரிவித்தார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கட்சித் தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நகராட்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணியின்றி தனித்து போட்டியிடுகிறது. இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மாநகராட்சியின் 21வயது இளம் மேயரான ஆரியா இராஜேந்திரன் பிரச்சாரம் மேற்கொண்டார்.

குழித்துறை நகராட்சிக்குட்பட்ட  குழித்துறைசந்திப்பு, வெட்டுவெந்தி, மார்த்தாண்டம் பகுதிகளில் தீ அவர் வாக்கு சேகரித்தார். அப்போது செய்தியாளர்களுக்கு  பேட்டியளித்த  ஆரியா ராஜேந்திரன், ஹிஜாப் விவகாரத்தில் மத உரிமைகளையும் தனிமனித சுதந்திரங்களையும் பறிக்ககூடாது என்பது தான் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைபாடு என தெரிவித்தார்.

இதையும் படிங்க: கேஸ் விலை குறைப்பு என்னாச்சு? பிரச்சார கூட்த்தில் பெண் எழுப்பிய கேள்விக்கு உதயநிதியின் பதில்

 கேரளா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு  அரசியல் எதிரியான  காங்கிரஸுடன், தமிழகத்தில் கூட்டணியில் உள்ளது தொடர்பாக  செய்தியாளர்கள் கேள்விக்கு,   கேரளாவில் உள்ள அரசியல் சூழ்நிலை அல்ல தமிழகத்தில். அந்தந்த மாநிலத்திற்கு ஏற்றவாறு அரசியல் நிலைபாடு மாறுபடும். தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனித்து போட்டியிடும் சூழ்நிலை உருவாகி வருகிறது என்றும் தெரிவித்தார்.

செய்தியாளர்: சஜயகுமார்- கன்னியாகுமரி

First published:

Tags: Kanniyakumari, Kerala, Local Body Election 2022, Marxist Communist Party