ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கலெக்டர் அலுவலகத்தில் மயங்கி விழுந்த விவசாயி... மருத்துவமனை வேண்டாம் மாட்டுக்கு புல் அறுக்க போக வேண்டும் என நெகிழ்ச்சி

கலெக்டர் அலுவலகத்தில் மயங்கி விழுந்த விவசாயி... மருத்துவமனை வேண்டாம் மாட்டுக்கு புல் அறுக்க போக வேண்டும் என நெகிழ்ச்சி

மயங்கிவிழுந்த விவசாயி

மயங்கிவிழுந்த விவசாயி

Kanyakumari : கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மயங்கி விழுந்த விவசாயி ஒருவர், மருத்துவமனைக்கு செல்ல மறுத்து, ‘வீட்டில் மாடு இருக்கிறது புல் அறுக்க போக வேண்டும்’ என்று நெகிழ்ச்சியாகத் தெரிவித்தார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் நடைபெற்று கொண்டிருந்த போது விவசாயி ஒருவர் மயங்கி விழுந்தார். அவரை, மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்ட போது, ‘வீட்டில் மாடு இருக்கிறது புல் அறுக்க போக வேண்டும்’ என நெகிழ்ச்சியாகத் தெரிவித்தார்.

  கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தலைமையில் இன்று நடந்தது. கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் அரவிந்த் பெற்றுக்கொண்டார். கூட்டத்தில், விவசாயிகள் பல கருத்துக்களை முன்வைத்தனர்.  யூரியா உரம் கடந்த ஒரு மாதமாக தட்டுப்பாடு இருந்து வருகவதாகவும் விவசாயிகளுக்கு தேவையான உரத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

  இந்நிலையில், கூட்டம் நடைபெற்று கொண்டிருந்த போது விஷ்ணு என்ற விவசாயி திடீரென மயங்கி கீழே விழுந்தார். அவரை அங்கிருந்து மீட்டு வெளியே கொண்டு வரும் போது அவர், அழுது கொண்டே வெளியே வந்தார். பின்னர் அவர் கூறுகையில், எனது  விவசாய நிலத்தை இன்னொருவர் ஆக்கிரமித்து வைத்திருப்பதாக பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் காவல்நிலையத்திலும்  எதிர் மனுதார்ருக்கு சாதகமாக போலீசார் ஈடுபட்டு வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

  Read More : நகைக்கடன் தள்ளுபடி: சென்னை உள்ளிட்ட நகர்ப்புறங்களில் சான்றிதழ் வழங்கும் பணி மும்முரம்..

  மேலும், தனது நிலத்தில் பயிரிட்ட நெல் கதிர்களை அறுவடை செய்ய முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதால்  குடும்பத்தினருடன் தற்கொலை செய்ய போவதாகவும்  கூறினார். இந்நிலையில் அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.

  Must Read : சாத்தூர் அருகே குழந்தை விற்பனை தொடர்பாக 6 பேர் மீது வழக்கு

  அப்போது, மருத்துவமனைக்கு செல்ல மறுத்த அவர்,  ‘வீட்டில் மாடு இருக்கிறது புல் அறுக்க போகவேண்டும், பிள்ளைங்க பாத்துக்கிட்டு இருக்கும் நான் வீட்டுக்கு போறேன்’ என்று கூறி நெகிழ்சியை ஏற்படுத்தினார். இந்த சம்பவத்தால் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது  நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

  செய்தியாளர் : ஐ.சரவணன், நாகர்கோவில்.

  Published by:Suresh V
  First published:

  Tags: Farmer, Kanyakumari