முகப்பு /செய்தி /தமிழ்நாடு / குமரியில் விவேகானந்தர் பாறை - திருவள்ளுவர் சிலையை இணைக்க கடல் பாலம் கட்ட டெண்டர்

குமரியில் விவேகானந்தர் பாறை - திருவள்ளுவர் சிலையை இணைக்க கடல் பாலம் கட்ட டெண்டர்

கன்னியாகுமரி

கன்னியாகுமரி

Kanyakumari Sea bridge | கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையையும் திருவள்ளுவர் சிலையையும் இணைக்கும் வகையில், ரூ.37 கோடி மதிப்பீட்டில் அமைய இருக்கும் கடல் பாலம் கட்டுவதற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மற்றும் விருதுநகர் ஆகிய ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டமானது அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் கடந்த ஜுலை மாதம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள், 5 மாவட்ட கலெக்டர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

அந்த கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு, “கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே 140 மீட்டர் தூரத்திற்கு தொங்கு பாலம் அமைக்கப்படும். இந்த கடல்சார் பாலம் ரூ.37 கோடி மதிப்பீட்டில் முழுவதும் இரும்பு பாலமாக அமைக்கப்படும் என்றும், கடலுக்கு நடுவே பாலம் அமைக்க வேண்டியிருப்பதால் சென்னை ஐஐடி பேராசிரியர்களின் கருத்துகளை கேட்டுள்ளதாகவும், ஆய்வு மேற்கொண்ட பின்னர் பாலப்பணிகள் துவங்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், திருநெல்வேலி நெடுஞ்சாலைகள் துறையின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவிலிருந்து இதற்கான டெண்டர் அறிவிப்பு கோரப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் மட்டுமே கோரப்பட வேண்டிய டெண்டரானது வரும் மே 04 ஆம் தேதி மதியம் 02:00 மணி வரை கண்காணிப்பு பொறியாளர் மூலம் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Must Read : மக்கள்தான் எஜமானர்கள்... ஒரு ரூபாய் கூட சிந்தாமல் சிதறாமல் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைய வேண்டும் - முதல்வர் ஸ்டாலின்

மேலும், பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமானம், ஒப்பந்தம் தொடர்பான பணிகள், பணிகளின் விவரங்கள், பணிகளின் தோராயமான மதிப்பு, EMD, டெண்டர் ஆவணங்களின் இருப்பு மற்றும் அனைத்து விவரங்களும் 14.03.2022 முதல் அரசு இணையதளமான https://tntenders.gov.in ல் தெரிந்து கொள்ளலாம் எனவும், டெண்டரில் ஏதேனும் மாற்றங்களோ அல்லது திருத்தங்களோ இருந்தால், அரசு இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்ட்டுள்ளது.

First published:

Tags: Kanyakumari, Swami Vivekananda, Tender, Thiruvalluvar