கன்னியாகுமரியில் கோயில் உண்டியல் திருட்டு... மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
கன்னியாகுமரியில் கோயில் உண்டியல் திருட்டு... மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
கன்னியாகுமரியில் கோயில் உண்டியல் திருட்டு
Kanyakumari District | புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது அதிகாலையில் கோயில் வளாகத்தில் கைலி மற்றும் டிசர்ட்டுடன் புகுந்த மர்ம நபர் கோயில் உண்டியலை பெயர்த்தெடுத்து தூக்கி செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது.
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே கோயிலில் புகுந்த மர்ம நபர் உண்டியலை தூக்கி சென்ற நிலையில் மர்ம நபர் உண்டியலை லாபகமாக தூக்கி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் இரணியலை அடுத்த நெட்டாங்கோடு பகுதியில் புகழ் பெற்ற பத்திரகாளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு தினமும் காலை, மாலை நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்த கோயிலின் ஆண்டு திருவிழா கடந்த வாரம் முடிவடைந்த நிலையில் தினமும் அர்ச்சகர் காலை, மாலை வேளைகளில் கோயில் நடை திறந்து பூஜை செய்து செய்வது வழக்கம்.
நேற்று மாலை பூஜையை முடித்து கோயில் கதவுகளை மூடி சென்ற அர்ச்சகர் இன்று காலை மீண்டும் கோயிலுக்கு வந்த போது கோயில் மூலவர் கருவறை முன் வைக்கப்பட்டிருந்த உண்டியல் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உண்டியலில் சுமார் 20 ஆயிரம் வரை பணம் மற்றும் நேர்ச்சை காணிக்கையாக நகைகளும் வசூலாகி இருக்கலாம் என்ற நிலையில் அர்ச்சகர் திருட்டு குறித்து கோயில் நிர்வாகிகளிடம் தகவலளித்த நிலையில் நிர்வாகிகள் சம்பவம் குறித்து இரணியல் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.
புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது அதிகாலையில் கோயில் வளாகத்தில் கைலி மற்றும் டிசர்ட்டுடன் புகுந்த மர்ம நபர் கோயில் உண்டியலை பெயர்த்தெடுத்து தூக்கி செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது. இதனையடுத்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் : சஜயகுமார் தனஜெயன் நாயர்.
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.