முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழகத்தில் முழு ஊரடங்கு: கேரள எல்லை களியக்காவிளையில் வாகனங்கள் தடுத்து நிறுத்தம்

தமிழகத்தில் முழு ஊரடங்கு: கேரள எல்லை களியக்காவிளையில் வாகனங்கள் தடுத்து நிறுத்தம்

தமிழக-கேரள எல்லையில் வாகனங்கள் நிறுத்தம்

தமிழக-கேரள எல்லையில் வாகனங்கள் நிறுத்தம்

தமிழக கேரள எல்லையான களியக்காவிளையில் இரு மாநிலங்களுக்கிடையே போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. அத்தியவசிய பால்,   மருத்துவ உதவி வசதிகள் உள்ளிட்டவை மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் தமிழக கேரளா எல்லை களியக்காவிளை யில் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றன. அத்தியாவசிய தேவைகளுக்கு வரும் வாகனங்கள் மட்டுமே தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கட்டுப்பாடுகள் ஜனவரி31ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி,வார நாட்களில் இரவு ஊரடங்கும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அமல்படுத்துள்ளது.  இரண்டாவது ஞாயிற்றுக் கிழமையாக இன்றும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது.தேவையின்றி வெளியே  சுற்றுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

ஞாயிறு முழு ஊரடங்கை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் கடைகள் , வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது. பொது போக்குவரத்தும் முடங்கியுள்ளது.  நாகர்கோவில் தக்கலை மார்த்தாண்டம் சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரி உள்ளிட்ட சுற்றுலா மையங்கள் அனைத்திலும் பெயர் வைத்து ஆங்காங்கே பேரிகார்டுகள் கொண்டு தடை செய்யப்பட்டுள்ளது.

தமிழக கேரள எல்லையான களியக்காவிளையில் இரு மாநிலங்களுக்கிடையே போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. அத்தியவசிய பால்,   மருத்துவ உதவி வசதிகள் உள்ளிட்டவை மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. இதேபோன்று ஆரல்வாய்மொழி முதல் களியாக்கவிளை  வரை சாலைகளில் 55 இடங்களில் தற்காலிக பேரிகார்டுகள் கொண்டு தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளித்த விஜய நல்லதம்பி கைது...யார் இவர்?

முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன. பொதுமக்களும் முழு ஊரடங்கிற்கு ஆதரவு தெரிவித்து வீடுகளை விட்டு வெளியே வரவில்லை.  சுமார் 1500 போலீசார் மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்தியாளர்: சஜயகுமார்- கன்னியாகுமரி

இதையும் படிங்க: காணும் பொங்கல்: கடற்கரை, பூங்காக்களில் பொதுமக்களுக்கு தடை... போலீசார் தீவிர கண்காணிப்பு

First published:

Tags: Corona, Kanniyakumari, Kerala, Lockdown