கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை பகுதியில் தாமிரபரணி ஆறு பாய்ந்தோடுகிறது. இதன் இருகரை ஓரங்களிலும் 20க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் குழித்துறை பாலவிளை பகுதிகளில் செயல்படும் செங்கல் சூளைகளில் ஆற்றின் கரையோரங்களை ஆக்கிரமித்து மண் எடுப்பது தொடர்கதையாகி வருகிறது.
ஆற்றின் கரையோரங்களிலுள்ள விவசாய நிலங்களில் உள்ள மண்ணை விலைக்கு வாங்கி, ஆற்றின் மட்டத்தை விட ஆழமாக மண் எடுப்பதால், அங்கே ஏற்படும் ஆழமான குட்டைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் காலங்களில், கரை உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகும் வாய்ப்புள்ளது என மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

செங்கல் சூளை
Must Read : புதிய தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு சிறப்பாக அமல்படுத்தி வருகிறது - பாலகுருசாமி
இதனால், விபத்துகள் ஏற்பட வாய்பு இருப்பதாகவும், ஆற்றின் கரையோரங்களில் எடுக்கப்படும் மண்ணை வெளியே கடத்தி வருவதாகவும், இது குறித்து புகார் தெரிவித்தாலும் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை எனவும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டிவருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.