Home /News /tamil-nadu /

கேரளாவுக்கு 7 டன் ரேஷன் அரிசி கடத்தல்... லாரியுடன் பறிமுதல் செய்த போலீசார்

கேரளாவுக்கு 7 டன் ரேஷன் அரிசி கடத்தல்... லாரியுடன் பறிமுதல் செய்த போலீசார்

கேரளாவுக்கு 7 டன் ரேஷன் அரிசி கடத்தல்

கேரளாவுக்கு 7 டன் ரேஷன் அரிசி கடத்தல்

Smuggled ration rice | கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்திச் செல்லப்பட்டு அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

    கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 7 டன் ரேஷன் அரிசியை வடசேரி போலீசார் லாரியுடன் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். 

    கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்திச் செல்லப்பட்டு அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு  வருகிறது.  இதைத் தடுக்க போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் நாகர்கோவில் வடசேரி போலீசார் டென்னிசன் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக சென்ற லாரியை  தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது அதில் அனுமதி இல்லாமல் 7 டன் ரேஷன் அரிசி கேரளாவுக்கு கடத்திச் செல்லப்படுவது தெரியவந்தது.

    இதையும் படியுங்கள் | பொள்ளாச்சியில் சூறைக்காற்றால் சாய்ந்த உயர் அழுத்த மின்கம்பம் - 3 வீடுகள் சேதம்!

    இதனைத் தொடர்ந்து அந்த லாரியை வடசேரி போலீசார் பறிமுதல் செய்தனர். லாரியில் இருந்த மது (44)மற்றும் வேலாயுதம்(38)  ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.



    வடசேரி போலீசார் பறிமுதல் செய்த லாரி மற்றும் பிடிபட்ட இருவரையும் நாகர்கோவில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்

    செய்தியாளர் : ஐ.சரவணன் 
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Kanyakumari, Kerala

    அடுத்த செய்தி