Home /News /tamil-nadu /

கன்னியாகுமரியில் ஷாக்... உலக அளவில் தடை செய்யப்பட்ட 'மெத்' போதை பொருட்கள் பறிமுதல்!

கன்னியாகுமரியில் ஷாக்... உலக அளவில் தடை செய்யப்பட்ட 'மெத்' போதை பொருட்கள் பறிமுதல்!

 'மெத்' போதை பொருட்கள் கடத்தியவர்கள்

'மெத்' போதை பொருட்கள் கடத்தியவர்கள்

Methamphetamine | கடந்த 6ம் தேதி தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த 16 கோடி ரூபாய் மதிப்பிலான மெத்தாம் பேட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது.

    கடுகளவு இருக்கும் மெத் கிரிஸ்டல் நாக்கில் வைத்தால் 24 மணி நேரம் போதை இறங்கேவே இறங்காது என கூறப்படுகிறது. உலக நாடுகள் அனைத்தும் தடை செய்துள்ள இந்த போதைப் பொருள் நம் நாட்டில் அதுவும் தமிழகத்தில் கன்யாகுமரியில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட  போதை பொருட்களில் ஒன்று மெத் எனப்படும் மெத்தாம்பேட்டமைன் . 1 கிராம் மெத் சுமார் 5 ஆயிரம் ரூபாய் வரை கள்ள சந்தையில் விற்கப்படுகிறது , கடுகளவு இருக்கும் மெத் கிரிஸ்டல் போதை மாத்திரையை நாவில் வைத்தால் 24 மணி நேரம் போதை இறங்கேவே இறங்காது என கூறப்படுகிறது. உலக அளவில் அனைத்து  நாடுகளிலும் தடை செய்யபட்டு உள்ள இந்த போதை பொருளை சைகாடிக் டிரக் எனவும் அழைக்கபடுகிறது.

    இப்படியான ஆபத்தான போதை பொருட்கள் இந்தியாவில் புழங்குகிறது என கூறினால் நம்ப முடிகிறதா நம்பி தான் ஆகவேண்டும். கடந்த 6 ம் தேதி தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த 16 கோடி ரூபாய் மதிப்பிலான மெத்தாம் பேட்டமைன் மத்திய வருவாய் புலனாய்வு துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. அதேப்போன்று கடந்த பிப்ரவரி மாதம் சுமார் 30 கோடி மதிப்பிலான மெத்  தூத்துக்குடி கியூ பிரிவு போலீசாரால்  பறிமுதல் செய்யப்பட்டது.



    தொடர்ந்து இதைத் தடுக்க கடலோர காவல் படை, கடலோர பாதுகாப்புக் குழும போலீஸார், சுங்கத் துறை, மத்திய வருவாய் புலனாய்வுத் துறை, கியூ பிரிவு போலீஸார் மற்றும் உள்ளூர் போலீஸார் என பல்வேறு துறையினரும், கடற்கரைப் பகுதிகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு  மெத்  கடத்தப்படுவதாக குமரி மாவட்ட போலீசாருக்கு தகவல் கிடைத்தது.



    அதன் அடிப்படையில் வடசேரி பகுதியில் உள்ள ஆம்னி  பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த கேரளாவை சேர்ந்த ஷாஜி(47)., அருண் துளசி(28).,மற்றும் குமரி மாவட்டத்தை  சேர்ந்த பிபின்(32) ஆகியோரை தனிப்படை போலீசார் பிடித்து சோதனையிட்டுள்ளனர். இதில் அவர்களிடம் சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான 50 கிராம் மெத்தாம்பேட்டமைன் இருந்தது தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவர்களை காவல் நிலையம் கொண்டு வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    அதில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரியவந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த  பிபின் 32 வயதான வாழை தார் தொழில் செய்து வந்த நிலையில் வியாபாரத்தில் நஸ்டம் ஏற்பட 26 லட்சம் ரூபாய் கடனாளியாகி உள்ளார். கடன் கொடுத்தவர்கள் பிபினை நெருக்க என்ன செய்வது என தெரியாமல் அவரது நண்பரான அருண் என்பவரிடம் ஆலோசனை கேட்டு தனது கிட்டினியை 30 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ய திட்டமிட்டு அதற்காக முயற்சி மேற்கொண்டு வந்துள்ளார். இந்த நிலையில் அருண் கேரளாவை சேர்ந்த சாஜி மூலமாக உண்ணி என்பவரிடம் பிபிணை அழைத்து சென்றுள்ளார்.



    அங்கு சென்ற நிலையில் மெத் நெட்வொர்க் குறித்து அவருக்கு தகவல் சொல்லவே அதிக பணம் கிடைக்கும் என்பதால் கடனையும் தீர்த்து விட்டு கிட்னியையும் காப்பாதிவிடலாம் என எண்ணிய பிபின் இதற்கு சம்மதித்துள்ளார். உடனடியாக அவரை பெங்களூரு அனுப்பிய அந்த போதை கும்பல் அவர் மூலம் 50 கிராம் மெத்ஐ கேரளாவிற்கு கடத்தி வந்துள்ளார். இதில் அதிக லாபம் கிடைக்கவே 2 ஆவது முறையாக பெங்களூரு போய் வரும் வேலையில் குமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் வைத்து தனிப்படை போலீசாரிடம் அவர்கள் சிக்கியது தெரியவந்துள்ளது.

    செய்தியாளர் : சரவணன் ஐயப்பன்
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Kanyakumari

    அடுத்த செய்தி