• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பாலியல் புகாரில் சிக்கிய அருமனை கிறிஸ்தவ இயக்க செயலாளர் ஸ்டீபன் - ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

பாலியல் புகாரில் சிக்கிய அருமனை கிறிஸ்தவ இயக்க செயலாளர் ஸ்டீபன் - ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

ஸ்டீபன்

ஸ்டீபன்

கணவனை பிரிந்து வாழும் பெண்ணை நாகர்கோவில் என்.ஜி.ஓ காலணி வீட்டில் அடைத்து வைத்து அருமனை கிறிஸ்தவ இயக்க செயலாளர் ஸ்டீபன் உட்பட பலருக்கு விருந்தாக்கியுள்ளார்.

  • Share this:
    கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் சர்சைக்குரிய வகையில் பேசி கைதாகி சிறையில் இருக்கும் ஜார்ஜ் பொன்னையா பேசிய நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்  அருமனை கிறிஸ்தவ இயக்க செயலாளர் ஸ்டீபன் உட்பட  எட்டு பேர் மீது மார்தாண்டம் மகளிர் காவல் நிலையத்தில் சிறைவைத்து கற்பழிப்பு உட்பட  ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடந்த ஆர்ப்பாட்ட போராட்டத்தில் இந்துமதம் , பாரதமாதா, மத்திய, மாநில அரசுகள் குறித்து இழிவாக பேசி அருமனை காவல்நிலையத்தில் 7பிரிவுகளின்படி வழக்கு பதிவு செய்து சிறையில் இருக்கும் ஜார்ஜ் பொன்னையாவின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும் அருமனை கிறிஸ்தவ இயக்க செயலாளரான ஸ்டீபன் அவரும் அதே வழக்கில் கைதாகி தற்போது தூத்துகுடி சிறையில் இ8ருக்கிறார். இவர்மீது ஏற்கனவே 25 வழக்குகள் நிலுவையில் இருக்கிறது.

    Also Read: மிஸ்ட்கால் சகோதரன்.. திடீர் காதலன் - இளம்பெண் புகாரால் காதல் மன்னன் கம்பி எண்ணும் பரிதாபம்

    இந்த நிலையில் இவர் உட்பட  எட்டு பேர் மீது குமரியை சேர்ந்த பெண் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். கணவனை பிரிந்து வாழும் அந்தப்பெண் திருமண  தகவல் மையம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார் அதன் உரிமையாளரான ஜெபர்சன் என்பவர் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து அந்த பெண்ணை கற்பழித்ததாகவும் அதனை வீடியோவாக எடுத்து வைத்துக்கொண்டு அந்தப்பெண்ணை பலமுறை பயன்படுத்திக்கொண்டுள்ளார்.

    Also Read:  அதிமுக அரசு வட்டி கட்டுவதற்கும் கடன் வாங்கியிருக்கிறது - பழனிவேல் தியாகராஜன்

    நாகர்கோவில் என்.ஜி.ஓ காலணி வீட்டில் அடைத்து வைத்து அருமனை கிறிஸ்தவ இயக்க செயலாளர் ஸ்டீபன் உட்பட பலருக்கு விருந்தாக்கியுள்ளார். இது சம்பந்தமாக  கடந்த  ஏப்ரல் மாதம் அந்தப்பெண்  புகார் அளித்ததால் ஜெபர்சன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதன் பிறகு அவரது தற்கொலைக்கு இந்த  பெண் புகார் அளித்ததே காரணம் என ஜெபர்சனின் மனைவி புகார் அளித்திருப்பதாக போலீசார் கூறி அந்த வழக்கை கிடப்பில் போட்டுள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தொடர்ந்து ஸ்டீபன் உட்பட  இந்த வழக்கில் தொடர்புடையோர் பல மிரட்டல்கள் விட்டு வந்ததால் பயத்தில் அமைதியாக இருந்த அந்த பெண் தற்போது கடந்த 26 ம் தேதி ஸ்டீபன் கைதாகியுள்ள சம்பவத்தை தொடர்ந்து  மீண்டும் ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளனர். இதன் பேரில் மார்தாண்டம் மகளிர் போலீசார் ஸ்டீபன்,  கபர்ஸ் ஜெபராஜ் உட்பட எட்டுபேர் மீது ஆறு  பிரிவுகள் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர்.

    செய்தியாளர் - சஜயகுமார் தனஞ்செயன்



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: