ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கன்னியாகுமரி அருகே கடல் நீரை மேகம் உறிஞ்சும் அதிசய நிகழ்வு... வைரலாகும் வீடியோ

கன்னியாகுமரி அருகே கடல் நீரை மேகம் உறிஞ்சும் அதிசய நிகழ்வு... வைரலாகும் வீடியோ

கடல் நீரை மேகம் உறிஞ்சும் அதிசய நிகழ்வு

கடல் நீரை மேகம் உறிஞ்சும் அதிசய நிகழ்வு

Viral Video | தூத்தூர் கடல் சற்று சீற்றமாகவே காணப்பட்ட நிலையில் திடீரென கடல் நீரை மேகம் உறிஞ்சும் அதிசய நிகழ்வு ஏற்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் கடல் பகுதியில் கடல் நீரை மேகம் உறிஞ்சும் அதிசய நிகழ்வு நடைபெற்ற நிலையில் அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வெப்ப சலனம் காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்யும் எனவும் கடல் பகுதியில் லேசான மழை பெய்யும் எனவும் வானிலை மையம் அறிவித்தது.

இதனையடுத்து கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆங்காங்கே பரவலாக சாரல் மழையும் கடல் சற்று சீற்றமாகவே காணப்படுகிறது.

இந்த நிலையில் தூத்தூர் கடல் சற்று சீற்றமாகவே காணப்பட்ட நிலையில் திடீரென கடல் நீரை மேகம் உறிஞ்சும் அதிசய நிகழ்வு ஏற்பட்டது.

இதையும் படியுங்கள் | ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூ.35 லட்சம் இழந்த இளைஞர் தற்கொலை.. சென்னையில் சோகம்!!

இந்த நிகழ்வு சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக நீடித்த நிலையில் அங்கிருந்த மீனவர்கள் இந்த நிகழ்வை பல்வேறு பகுதிகளில் இருந்து படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றிய நிலையில் அது தற்போது வைரலாகி வருகிறது.

First published:

Tags: Kanyakumari, Viral Video