Home /News /tamil-nadu /

வெள்ளிமலை கோவில் கட்டடத்துக்கு 'சீல்' ... பாஜக மற்றும் இந்து முன்னணியினர் போராட்டம்

வெள்ளிமலை கோவில் கட்டடத்துக்கு 'சீல்' ... பாஜக மற்றும் இந்து முன்னணியினர் போராட்டம்

வெள்ளிமலை கோவில் கட்டடத்துக்கு 'சீல்'

வெள்ளிமலை கோவில் கட்டடத்துக்கு 'சீல்'

BJP Protest | பக்தர்கள் அறநிலையத்துறை அதிகாரிகளின் வாகனத்தை சிறை பிடித்ததோடு ஆலய வளாகத்தில் உள்ள அறநிலையத்துறை அலுவலகத்தின் உள் புகுந்து தகறாறில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிமலை ஆலய முன்னேற்ற சங்க அலுவலகத்திற்கு சீல் வைத்த இந்து அறநிலைய துறை அதிகாரிகளை கண்டித்து பக்தர்கள் , பாஜகவினர் மற்றும் இந்து முன்னணியினர் போராட்டம்  நடத்தியதால் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

கன்னியாகுமாரி மாவட்டம் வெள்ளிமலை பால சுப்பிரமணிய திருக்கோவில் ஆலய முன்னேற்ற சங்க கட்டிடம் - (சஸ்டி மண்டபம்) பல ஆண்டு சிதிலமடைந்து காணப்பட்டதால் பக்தர்களின் நிதி உதவியோடு 11.3.2004 -ம் ஆண்டு புனரமைக்கப்பட்டு இந்து அநிலைய துறை ஆணையாளர் தனபால் அவர்களால் திறந்து வைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தது.

இந்த மண்டபத்தை திருவிழா மற்றும் ஆலய வளர்ச்சிக்காக பக்தர்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் இந்து அநிலைய துறை அதிகாரிகள் திடீரென பக்தர்கள் பயன் படுத்த முடியாத நிலையில் சீல் வைத்து பூட்டி சென்றுள்ளனர். இச்சம்பவம் பக்தர்கள் மத்தியில் காட்டு தீ போல் பரவியதால் பக்தர்கள் அங்கு குவிய தொடங்கினர். இதனால் அங்கு பதட்டம் நிலவியதை தொடர்ந்து போலீஸ் குவிக்கப்பட்டது.

இதனையடுத்து பக்தர்கள் அறநிலையத்துறை அதிகாரிகளின் வாகனத்தை சிறை பிடித்ததோடு ஆலய வளாகத்தில் உள்ள அறநிலையத்துறை அலுவலகத்தின் உள் புகுந்து தகறாறில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. இதனை அடுத்து பக்தர்கள் உள்ளே புகாத வண்ணம் போலீசார் வாசலில் நின்று பாதுகாப்பு கொடுத்தனர்.



இதனால் தொடர்ந்து அங்கு பதட்டம் நிலவிவருகிறது. அந்த போராட்டத்தில் பாரதீய ஜனதா மாவட்ட தலைவர் தர்மராஜ்,  மற்றும் ஏராளமான பக்தர்கள் , பாஜக, இந்து முன்னணியினர் கலந்து கொண்டனர். பாரதீய ஜனதா மாவட்ட தலைவர் தர்மராஜ் திடீரென போராட்ட பந்தலில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



மேலும் பக்தர்கள் ஆலய வளாகத்தினுள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்கள் கலைந்து செல்லாத காரணத்தால் அவர்களை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் வைத்துள்ளனர். கைது செய்த நேரத்தில் பெண் ஒருவர் காயமடைந்ததால் போலீசாருக்கு எதிராக முழக்கமிட்டனர்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: BJP, Kanyakumari

அடுத்த செய்தி