ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சாலை விபத்தில் பலியான செயின் பறிப்பு கொள்ளையன்.. கூட்டாளி சொன்ன அதிர்ச்சித் தகவல்

சாலை விபத்தில் பலியான செயின் பறிப்பு கொள்ளையன்.. கூட்டாளி சொன்ன அதிர்ச்சித் தகவல்

செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்கள்

செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்கள்

Kanyakumari | கன்னியாகுமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்களில் ஒருவர் திருவனந்தபுரம் பகுதியில் நடந்த சாலை விபத்தில் பலி 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை பகுதியைச் சேர்ந்த பிறேமிகா (வயது 35). இவர் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார்.  நேற்று அதிகாலை பணிமுடித்துவிட்டு வழக்கம்போல் அழகியமண்டபம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது  குறுக்கே இருசக்கர வாகனம் வந்து பிரேக் பிடிக்கவே பிறேமிகா வாகனத்தை நிறுத்தியுள்ளார்.

இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த இருவரில் ஒருவன் இறங்கி வந்து பிறேமிகாவின் கழுத்தில் கிடந்த பத்து சவரன் தங்க சங்கிலியை பறித்து விட்டு தப்பி சென்றான்.  இதுசம்பந்தமாக தக்கலை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மருமாமூடு பகுதியில் இரண்டு இளைஞர்கள்  சாலையில் உள்ள டிவேடரில் இருசக்கர வாகனம் மோதி ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார் ஒருவர் காயமடைந்தார். அவரை மீட்டு திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரது பாக்கெட்டிலிருந்து அறுந்த நிலையில் பத்து சவரன் தங்க சங்கிலி இருப்பதை பார்த்த போலீசார் அவனிடம் விசாரித்தனர். விசாரணையில் இறந்தவர் திருவனந்தபுரம் கடினங்குளம் பகுதியை சேர்ந்த சஜாதுஹான் (வயது 17 ) என்பது காயமடைந்த நபர் கோட்டையம் ராமபுரத்தை  சார்ந்த அமல் ( வயது 21)  சேர்ந்தவன் என்பதும் குமரி மாவட்டம் அழகியமண்டபத்தில் செயின் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

Read More : 10 நாட்களுக்கு முன் தோண்டப்பட்ட குழி.. பல மாதங்களுக்கு முன் தீட்டப்பட்ட திட்டம்.. தம்பதி கொலையில் திடுக் தகவல்!

இதுகுறித்து கேரள போலீசார் தமிழக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் அவனிடம் நடத்திய விசாரணையில் ஆடம்பர இருசக்கர வாகனங்களில் நண்பர்களுடன் இணைந்து கேரளாவில் இருந்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் செயின் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருவதும். இறந்த சஜாதுஹான் கடந்த மூன்று தினங்களுக்கு முன் திருவனந்தபுரம் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.

இவர்களில் யார் போலீசில் சிக்கினாலும் திருட்டு நகைகளில் கிடைக்கும் பணத்தை கொண்டு இவர்களுக்காக சில வழக்கறிஞர்கள் மூலம் அவர்களை ஜாமீனில் எடுப்பதும் தெரியவந்துள்ளது. குமரி மாவட்டத்தில் பல கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இந்த கும்பலை குமரி  போலீஸார் தனிப்படை அமைத்து தேடிவந்தது குறிப்பிடத்தக்கது

Published by:Elakiya J
First published:

Tags: Crime News, Kanyakumari, Kerala