ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கல்லூரி மாணவர்களுக்கிடையே பழிக்குப் பழி மோதல்.. வீடியோ வைரலானதால் காவல்துறையினர் விசாரணை

கல்லூரி மாணவர்களுக்கிடையே பழிக்குப் பழி மோதல்.. வீடியோ வைரலானதால் காவல்துறையினர் விசாரணை

கல்லூரி மாணவர்களுக்கிடையே மோதல்

கல்லூரி மாணவர்களுக்கிடையே மோதல்

Kanyakumari District : இரண்டு தரப்பினர்களாக மாணவர்கள் மோதலில் ஈடுபட்டதால் ஒருவருக்கொருவர் மாறி மாறி தாக்கி கொண்டனர். இதில் படுகாயம் அடைந்த ஒரு மாணவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  கன்னியாகுமரி திருநெல்வேலி மாவட்ட எல்லை பகுதியில் அமைந்துள்ள  தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கிடையே மோதல் நடக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மோதல் குறித்து நெல்லை மாவட்டம் பழவூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே நெல்லை மாவட்டம் லெவிஞ்சிபுரத்தில் உள்ள  தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும் நான்காம் ஆண்டு படிக்கும் மெக்கானிக்கல் மற்றும் இசிஇ மாணவர்களுக்கும் இடையே ஏற்கனவே கடந்த 6 மாதங்களாக மோதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

  இதில் ஒரு தரப்பு மாணவர்கள் நெல்லை மாவட்டம் செட்டிகுளம் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் மற்றொரு தரப்பினர் கன்னியாகுமரி அருகே உள்ள தெங்கம்புதூர் பகுதியை சேர்ந்த மாணவர்கள் என்றும் கூறப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு செட்டிகுளம் பகுதியை சேர்ந்த மாணவர்களை குமரி மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் தாக்கியதாக தெரிகிறது இதற்குப் பழிக்குப் பழி தீர்க்க இவர்களுக்கிடையே திடீரென மோதல் உருவானது எனக் கூறப்படுகிறது.

  ALSO READ |  'தமிழ்நாட்டில் ஒருபோதும் காவி வர முடியாது' - திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி

   இரண்டு தரப்பினர்களாக மாணவர்கள் மோதலில் ஈடுபட்டதால் ஒருவருக்கொருவர் மாறி மாறி தாக்கி கொண்டனர். இதில் படுகாயம் அடைந்த ஒரு மாணவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது. இதுகுறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவம் குறித்து நெல்லை மாவட்டம் பழவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  செய்தியாளர் : ஐ.சரவணன்

  Published by:Sankaravadivoo G
  First published:

  Tags: College student, Crime News, Kanyakumari, Viral Video