ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

12 முறை அறுவை சிகிச்சை... கைகள் இழப்பு - வானுயர பறக்க துடித்த பட்டதாரி இளைஞரின் கோரிக்கை

12 முறை அறுவை சிகிச்சை... கைகள் இழப்பு - வானுயர பறக்க துடித்த பட்டதாரி இளைஞரின் கோரிக்கை

கைகளை இழந்த இளைஞர்

கைகளை இழந்த இளைஞர்

Kanyakumari : இரண்டு கைகளையும் இழந்து குடும்ப வறுமையை போக்க வாழ்க்கை போராட்டம் நடத்தும் இளைஞருக்கு உதவிக்கரம் நீட்ட முன் வர வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 4 minute read
  • Last Updated :

12 முறை அறுவை சிகிச்சை செய்து, இரண்டு கைகளையும் இழந்த பின்பும் தன்னம்பிக்கைளுடன் குடும்பத்தின் வறுமையை போக்க வாழ்க்கை போராட்டம் நடத்தும் இவருக்கு உதவிக்கரம் நீட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் முன் வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதியில் தற்போது தாய் தந்தையுடன் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறார் மதன் (32), மகாராஜ பிள்ளை - உஷா குமாரி தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள். இதில் மூத்த மகன் மதன் மற்றும் இளைய மகள். இவர்கள் 6 ஆண்டுகளுக்கு முன்பு வரை நாகர்கோவில் ஆசாரி பள்ளம் பகுதியில் சொந்த வீட்டில் வசித்து வந்தனர். மதனின் தந்தை பொதுப்பணி துறையில் பியூண் ஆக பணியாற்றி ஓய்வு பெற்றவர். மகன் மதனை கம்யூட்டர் சயன்ஸ் டிப்ளமோ மற்றும் வயர்லெஸ் நெட்ஒர்க் சம்பந்தப்பட்ட CCNA கோர்ஸ் படிக்க வைத்தும் மகளையும் படிக்க வைத்தார். குடும்பத்தின் முதுகெலும்பான ஒரே ஒரு ஆண் மகனான மதனை நம்பி வாழ்ந்து வந்த பெற்றோர்களின் எதிர்பார்ப்புகளுக்கு எந்த வித தோய்வும் ஏற்படுத்தாமல் மதன் தனது படிப்பை முடித்து விட்டு தனியார் நிறுவனத்தில் வயர்லெஸ் நெட்ஒர்க் பணியில் சேர்ந்து வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் அந்த குடும்பத்தின் அத்தனை அத்தனை கனவுகளையும், எதிர்பார்ப்புகளையும் சீர்குலைத்து கொண்டு அந்த கோர விபத்து நிகழ்ந்தது. 2015 மே மாதம் 22 ஆம் தேதி அன்று மதன் நாகர்கோவில் அருகே மயிலாடி பகுதியில் ஒரு கட்டடத்தின் மாடியில் வயர்லெஸ் நெட்ஒர்க் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது எதிர்பாராமல் தனது கையில் இருந்த நீளமான கம்பி அருகாமையில் உள்ள மின் கம்பியில் உரசி மின்சாரம் பாய்ந்து விபத்து ஏற்பட்டது. அன்று மதனின் வயது 25. இந்த விபத்தில் மதனின் தலை முதல் பாதம் வரை பல்வேறு பகுதிகள் கருகி சுய நினைவிழந்து கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள KIMS தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சுய நினைவில்லாமல் 3 மாதம் சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து 6 மாதம் படுக்கையில் இருந்து வந்த இவர் தொடர்ந்து கால் முதல் தலை வரை பல்வேறு பகுதிகளில் பிளாஸ்டிக் சர்ஜரி உட்பட 11 அறுவை சிகிச்சை ஒரே மருத்துவ மனையில் மேற்கொண்டனர்.

படிப்படியாக நினைவு திரும்பவே மதனின் இரு கைகளையும் அப்புறப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இடது கை முற்றிலும் அகற்றியதோடு வலது கையின் மணிக்கட்டு வரை கையை அகற்றினர். இதனிடையே மதனின் உயிரை காப்பாற்ற போராடிய பெற்றோர்கள் பல லட்சம் ரூபாய் செலவழித்து மேலும் சிகிச்சைக்கு பல லட்சம் ரூபாய் தேவைப்பட்ட நிலையில் தங்களது சொந்த வீட்டை 20 லட்சம் ரூபாய்க்கு விற்று அந்த பணம் முழுவதும் சிகிச்சைக்காக செலவிடப்பட்டு சுமார் 30 லட்சம் ரூபாய் வரை சிகிச்சை க்காக செலவிட்ட இந்த குடும்பம் வறுமையின் உச்சத்தில் தள்ளப்பட்டு தற்போது சுசீந்திரம் பகுதியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு மதனின் நுரையீரலில் தொற்று ஏற்பட்டு நாகர்கோயிலில் உள்ள சிவா தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். இது மதனின் 12 வது அறுவை சிகிச்சை என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்கால கனவுகளோடு ஒரு குடும்பத்தின் முதுகெலும்பான மகன் பட்டாம்பூச்சி போல் சிறகடித்து பறந்து வந்த இந்த இளைஞனின் கனவுகள் கருகியதோடு ஒட்டு மொத்த குடும்பமும் தற்போது வறுமையில் தவித்து வருகின்றனர். இந்த விபத்து ஏற்படுத்திய அதிர்ச்சியில் மதனின் தந்தை தற்போது மன நோயாளி போல் மாறி உள்ளார். இவர் யாரிடமும் பேசுவது இல்லை. எப்போதும் சோகத்துடன் மௌனமாக மன அழத்தத்துடனும் உள்ளார் இவர். இயற்கை உவாதிகள் முதல் உடை மாற்றுவது, உணவு சாப்பிடுவது, தாகத்திற்கு தண்ணீர் குடிப்பது வரை  பிறரின் உதவி இன்றி தானாக செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட மதனை கண் இமைக்காமல் அத்தனையும் மதனின் தாய் அருகில் இருந்து பராமரித்து வருகின்றனர்.

தங்கள் வாழ்க்கைக்கு பின் மகனை யார் பார்த்து கொள்வது என்று கவலையுடன் கண்ணீர் விட்டு கதறுகின்றார் இந்த தாய். இருப்பினும் மதன் பாதி அகற்றப்பட்ட தனது வலது கையால் மொபைல் போன் பயன்படுத்தவும் மேலும் லேப்டாப் பயன்படுத்தவும் முயற்சி செய்து தற்போது அது எளிதாக செயல்படுத்த கற்று கொண்டார். ஆனால் இதை தனது அருகில் யாராவது ஒருவர் எடுத்து கொடுத்தால் மட்டுமே முடியும். அறுவை சிகிச்சை செய்த கால்கள் என்பதால் எளிதாக நடக்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மதன் குடும்ப வறுமையை போக்க தனது நண்பர் ஒருவரின் நிறுவனத்தில் வீட்டில் இருந்து கொண்டே பாதி அகற்றப்பட்ட வலது கையால் லேப்டாப் மூலம் பணி செய்து வருகிறார். தற்போது மதனின் கனவும் தேவையும் சென்சார் மூலம் செயல்படும் ஒரு செயற்கை கை. Myo electric hand என்ற துண்டிக்கப்பட்ட கையின் நரம்புகள் வழியாக கிடைக்கும் சென்சார் மூலம் செயல்படும் அசைவுகள் வழியாக அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள முடியும்.

Read More : ''ஆடை உற்பத்திக்கான நூல் விலை உயர்வை கட்டுப்படுத்துங்கள்'' - மத்திய, மாநில அரசுகளுக்கு விஜயகாந்த் வலியுறுத்தல்

இதை முற்றிலும் துண்டிக்கப்பட்ட இடது கை பகுதியில் பொறுத்த முடியாது. பாதி துண்டிக்கப்பட்ட வலது கையில் மட்டுமே பொருத்த முடியும். இதற்காக மருத்துவர் ஒருவரின் அறிவுரை படி கோவையில் உள்ள ஜெர்மன் நாட்டில் தயாரிக்கும் Otto Bocks என்ற இந்த myo electric hand விற்பனை செய்யும் நிறுவனத்தில் சென்று சோதனை மேற்கொண்டனர். அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நிபுணர்கள் மூலம் மேற்கொண்ட சோதனையில் மதனின் வலது கையால் அனைத்து அசைவுகளும் மேற்கொள்ள முடியும் என்பது தெரியவந்தது. ஆனால் இந்த செயற்கை கைக்கு 15 லட்சம் ரூபாய் விலை என்பதால் பணம் இல்லாத காரணத்தால் அதை பொருத்த முடியவில்லை.

Must Read : வித்தியாசமான முறையில் வந்து வேட்பு மனு தாக்கல்.... கவனத்தை ஈர்த்த வேட்பாளர்கள்

மதனுக்கு தன் வாழ்க்கை கனவுகள் அனைத்தும் இழந்த நிலையில் தற்போது பிறர் உதவி இன்றி உடை மாற்றுவது, உணவு அருந்துவது, மொபைல் போன் , லேப்டாப் மூலம் பணிகள் எதுவாக செய்வது உள்ளிட்ட அத்தியாவசிய அடிப்படை தேவைகளை செய்ய முடியும் என்ற கனவு மட்டுமே மதனுக்கு தற்போது. ஆனால் 15 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு வரும் இந்த செயற்கை கை என்ற மதனின் கனவு நிறைவேற யாராவது உதவிக்கரம் நீட்ட முன் வருமா என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர் மன உறுதியுடன் தன்னம்பிக்கை கைவிடாமல் மீண்டு வர துடிக்கும் இந்த இளைஞன் மற்றும் இவரது தாய் தந்தை.

செய்தியாளர் : சஜ்ஜய குமார், கன்னியாகுமரி

Published by:Suresh V
First published:

Tags: Kanyakumari