ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சொத்துக்காக அண்ணனை அடித்துக்கொன்ற தம்பி.. குமரியில் நடந்த பயங்கரம்

சொத்துக்காக அண்ணனை அடித்துக்கொன்ற தம்பி.. குமரியில் நடந்த பயங்கரம்

கன்னியாகுமரி கொலை

கன்னியாகுமரி கொலை

Kanyakumari : குடும்பச் சொத்தை பிரித்து தராத சகோதரனை அவரது தம்பியே அடித்துக்கொன்ற சம்பவம் குமரியில் நடந்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  கன்னியாகுமரியில் சொத்து தகறாறில் அண்ணனை கம்பியால் அடித்து கொன்ற தம்பியை கைது செய்த இரணியல் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

  கன்னியாகுமரி மாவட்டம்  குருந்தன்கோடு  வர்த்தகநாடார் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 41) கட்டிட ஒப்பந்ததாரரான இவருக்கும் இவரது தம்பி கதிரவன்  என்பவருக்கும் குடும்ப வீட்டின் சொத்தை பிரிப்பது சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 22ம் தேதி சிவகுமார் வேலைக்கு சென்று விட்டு இரவு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். வர்த்தகநாடார் குடியிருப்பு பகுதியில்  வரும்போது அங்கு வந்த அவரது தம்பி கதிரவன்  குடும்பச் சொத்தை பிரித்து தர மாட்டாயா எனக்கூறி  தகராறில் ஈடுபட்டுள்ளார்.

  மேலும் தொடர்ந்து ஆத்திரம் அடங்காத கதிரவன் அருகில் கிடந்த இரும்பு பைப்பை  எடுத்து சிவகுமாரின் தலையில் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சிவகுமாருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டு ரத்தம் சொட்ட சொட்ட அலறியபடியே ரத்த வெள்ளத்தில் சாய்ந்துள்ளார்.இவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சிவகுமாரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

  Also Read: தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து பாலியல் சீண்டல் - சிசிடிவி கேமராவில் சிக்கிய வாலிபர்

  இதுகுறித்து சிவகுமார் மனைவி வனிதா  இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  புகாரின் பேரில் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்த  போலீசார் தலைமறைவாக இருந்த கதிரவனை கைது செய்தனர். இந்நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி சிவகுமார் நேற்று  பரிதாபமாக உயிரிழந்தார்.

  Also Read: கள்ளக்காதலில் மனைவி... சாம்பாரில் விஷம் கலந்து திமுக பிரமுகர் கொலை

  இதையடுத்து கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார் கதிரவனை இரணியல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் கிளை சிறையில் அடைத்தனர்.

  செய்தியாளர்: சஜயகுமார்  (கன்னியாகுமரி)

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Crime News, Death, Family fight, Kanyakumari, Property