• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சொத்தில் பங்கு கேட்ட அண்ணன்.. அடித்துக்கொன்ற தங்கை குடும்பம் - வெளியான சிசிடிவி காட்சியால் அதிர்ச்சி

சொத்தில் பங்கு கேட்ட அண்ணன்.. அடித்துக்கொன்ற தங்கை குடும்பம் - வெளியான சிசிடிவி காட்சியால் அதிர்ச்சி

சிசிடிவி காட்சிகள்

சிசிடிவி காட்சிகள்

குமரியில் மீனவர் அடித்துக்கொலை செய்யப்பட்டது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
    கன்னியாகுமரி மாவட்டம் குறும்பனை அருகே மீனவர் அடித்து கொலை குற்றவாளியை கைது செய்த போலீசார் வைரலாகும் சிசிடிவி காட்சிகளால் திணறல்.

    கன்னியாகுமரி மாவட்டம் குறும்பனை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் 55 வயதான புருனோ. விசைப்படகுகளை பழுது பார்ப்பதும் ஆழ்கடலில் சிக்கி நிற்கும் படகுகளை பைபர் படகுகளால் மீட்டு வரும் பணியில் ஈடுபட்டு வந்தார். இவர் கடந்த காவங்களில் மாநிலம் விட்டு மாநிலங்களுக்கு மீன்பிடி தொழிலுக்கு சென்று வருவதாக தெரிகிறது . இந்நிலையில் கடந்த மாதம் மீன்பிடி தொழிலுக்கு சென்று சொந்த ஊர் திரும்பிய இவர் தனது சகோதரியிடம் தனது சொத்தில் உள்ள பங்கை கேட்டுள்ளார்.

    அவரது சகோதரி 27-ம் தேதி வீட்டில் வந்து பேசுமாறு அழைத்த நிலையில் அன்றும் பேச்சுவார்தைக்கு தங்கை தயாராகாத நிலையில் கடந்த 2-ம் தேதி புருனோ தனது சகோதரியின் வீட்டிற்கு குடி போதையில் சென்று சொத்தில் உள்ள பங்கை தருமாறு கேட்டுள்ளார். இந்நிலையில்  சகோதரியின் குடும்பத்தினர் புருனோவை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த புருனோவை ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

    அந்தோணி (வயது 44) என்பவர் புருனோவை தாக்கிவிட்டதாகவும் கருங்கல் காவல்நிலையத்தில் புகாரளித்தனர். போலீஸார் அடிதடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்தி வந்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த புருனோ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  இதனையடுத்து போலீஸார் இதனை கொலை வழக்காக பதிவு செய்து அந்தோணி என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில் புருனோ மீது தாக்குதல் நடத்தியது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக குளச்சல் உட்கோட்ட டி.எஸ்.பி. தங்கராமன் அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது சிசிடிவி காட்சிகள் கிடைத்து விட்டதாகவும் காவல் அதிகாரிகள் சரியாக புலன் விசாரணை நடத்தாததால் ஏற்பட்ட பிரச்சனை தொடர்புடைய இரு நபர்களை கைது செய்து விட்டதாகவும் விளக்கமளித்தார்.

    செய்தியாளர்: சஜயகுமார் ( கன்னியாகுமரி)

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: