Home /News /tamil-nadu /

கன்னியாகுமரியில் பரபரப்பு! பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த பட்டதாரி வாலிபர்கள் கைது...

கன்னியாகுமரியில் பரபரப்பு! பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த பட்டதாரி வாலிபர்கள் கைது...

kanniyakumari Sale of cannabis | ஆபரேசன் 2.0 என்ற நடவடிக்கை மூலம் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளையில் ஈடுபட்ட பட்டதாரி வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரியில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளையில் ஈடுபட்ட பட்டதாரி வாலிபர்கள் மூவரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளையில் ஈடுபட்ட பட்டதாரி வாலிபர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 200-கிராம் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் பள்ளி கல்லூரி மாணவர்கள் போதைக்கு அடிமையாவதை கட்டுபடுத்த கஞ்சா விற்பனை செய்யும் கும்பலை கண்காணித்து கைது செய்து நடவடிக்கை எடுக்க ஆபரேசன் 2.0 என்ற நடவடிக்கையை முன்னெடுக்க டிஜிபி உத்தரவிட்ட நிலையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கஞ்சா வியாபாரிகளை கைது செய்து வருகின்றனர்.

அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியிலும் தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
நேற்று மாலை குளச்சல் வி.கே.பி சந்திப்பு பகுதியில் உள்ள தனியார் பள்ளி முன் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது
சந்தேகத்திற்கு இடமாக ஒரு இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று வாலிபர்களை மடக்கி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த ராஜித்,மண்டைக்காடு பகுதியை சேர்ந்த ஷாஜா ஸ்டாலின், மற்றும் குளச்சல் பகுதியை சேர்ந்த ஸ்டாலின் பேப்டிஸ்ட் என்பது பட்ட படிப்பு முடித்த மூவரும் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளையில் ஈடுபடுவதும் தெரியவந்தது.

அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டவர் தான் ஆளுநர்: உச்சநீதிமன்றம் திட்டவட்டம்

இதனையடுத்த அந்த மூன்று வாலிபர்களையும் கைது செய்து இரணியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்த குளச்சல் போலீசார் அவர்களிடம் இருந்த 200-கிராம் கஞ்சா, கஞ்சா புகைப்பதற்கான உபகரணம் மற்றும் அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Kanniyakumari

அடுத்த செய்தி