ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஒரு லட்சம் மாணவ மாணவிகளுக்கு இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி - அமைச்சர் மனோ தங்கராஜ்

ஒரு லட்சம் மாணவ மாணவிகளுக்கு இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி - அமைச்சர் மனோ தங்கராஜ்

மனோ தங்கராஜ்

மனோ தங்கராஜ்

Kanyakumari : மாணவர்களுக்கு இலவசமாக ஆழ்நிலை தொழில்நுட்ப பயிற்சி 100 முதல் 240 மணி நேரம் வரை வழங்கப்படும் என நாகர்கோவிலில் நடந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் மாணவ மாணவிகளுக்கு, ஆழ்நிலை தொழில்நுட்ப பயிற்சி வழங்கப்படும் என்றும், தனியார் நிறுவனங்களில் 50 ஆயிரம் முதல் 75 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படும் இந்த பயிற்சி இலவசமாக 100 முதல் 240 மணி நேரம் வரை வழங்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ்  தெரிவித்துள்ளார்.

  கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இன்று தமிழக அரசின் தகவல் மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகள் உயர்கல்வி நிறுவனங்கள் தனியார் ஐடி நிறுவனங்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட தொழில்நுட்ப மாநாடு  நடந்தது.  இந்த மாநாட்டில் புதிய தகவல் மற்றும் தொழில்நுட்பங்கள் பள்ளி மாணவ மாணவிகள் முதல் அனைத்து தரப்பினருக்கும் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு தகவல்கள் பரிமாறப்பட்டன.

  இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக தகவல் மற்றும் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். “தமிழகத்தில் பிரபல தொழில்நுட்ப நிறுவனங்களோடு இணைந்து மாணவர்களுக்கு ஆழ்நிலை தொழில்நுட்ப பயிற்சி வழங்கப்படுகிறது.

  தனியார் நிறுவனங்களில் 50 ஆயிரம் முதல் 75 ஆயிரம் ரூபாய் வரை செலவழித்து படிக்க வேண்டிய இந்த பயிற்சியை தமிழக அரசு இலவசமாக பயிற்றுவிக்கிறது. 100 மணிநேரம் முதல் 240 மணிநேரம் வரை நடத்தப்படும் இந்த பயிற்சியின் மூலம் ஆண்டொன்றுக்கு ஒரு லட்சம் மாணவ மாணவிகள் பயன்பெற உள்ளனர்.

  தொழில்நுட்ப வல்லுநர்கள் மாநாட்டில் மனோ தங்கராஜ்

  Must Read : பீர் பாட்டிலால் தலைமை ஆசிரியரை குத்த முயன்ற பிளஸ் 2 மாணவன் - வைரலாகும் வீடியோ

  இந்த பயிற்சியை முடித்த அனைவருக்கும் வேலைவாய்ப்பு உறுதி என்ற நிலையில் முனைப்புடன் தகவல் தொழில்நுட்பத் துறை செயல்படுத்தி வருகிறது என்று கூறினார்.

  செய்தியாளர் - ஐ.சரவணன், நாகர்கோவில்.

  Published by:Suresh V
  First published:

  Tags: Kanyakumari, Technology, Training