ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

'மலையாள மக்கள்  அனைவருக்கும் விஷூ நல்வாழ்த்துக்கள்' - பினராயி விஜயன்

'மலையாள மக்கள்  அனைவருக்கும் விஷூ நல்வாழ்த்துக்கள்' - பினராயி விஜயன்

பிணறாயி விஜயன்

பிணறாயி விஜயன்

Pinarayi Vijayan | சமுதாய ஒற்றுமை முன்பை விட மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த காலகட்டத்தில்  அன்புடனும் சகோதரத்துவத்துடனும்  நிறைந்த மனதுடன் விஷூவை ஒன்றாகக் கொண்டாடுவோம் என பினராயி விஜயன் கூறியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

இன்று கேரளாவில் விஷு  பண்டிகை கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு கேரளா முதல்வர் பினராயி விஜயன் கேரள மக்களுக்கு விஷு பண்டிகை தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், செழுமையும், வளமும் நிறைந்த புதிய விடியலை வரவேற்கும் விஷு நாட்டின்  ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் வலுப்படுத்தும் வகையில் அமையட்டும். விஷு என்பது கேரளாவின் விவசாய கலாச்சாரத்தின் முக்கியத்துவத்தை நினைவுபடுத்தும் பண்டிகையாகும். நலிவடைந்து வரும் விவசாய பாரம்பரியத்தை மீண்டும் திரும்ப பெறுவதில்  உற்சாகமாக உள்ளோம்.

நெல் மற்றும் காய்கறி உற்பத்தி மீண்டும் அமோகமாக உள்ளது. கோவிட் தொற்றுநோயால் ஏற்பட்ட நெருக்கடியைக் கடந்து கேரளா புதிய பாய்ச்சலுக்குத் தயாராகி வருகிறது. நாட்டின் விரிவான மற்றும் அனைத்துத் துறையிலும்  வளர்ச்சியை உறுதி செய்ய ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் விஷூ பண்டிகையின் நோக்கத்தை  ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டு புதிய சகாப்தத்திற்கு உறுதியான கால்தடம் பதித்து முன்னேற வேண்டும்

மலையாள மக்கள்  அனைவருக்கும் விஷூ நல்வாழ்த்துக்கள். மகிழ்ச்சியுடனும் செழிப்புடனும் புதிய விடியலை வரவேற்கும் விஷு கொண்டாட்டம், நாட்டின் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை வலுப்படுத்தட்டும் விதமாக அமையட்டும்.கேரளாவின் விவசாய கலாச்சாரத்தின் முக்கியத்துவத்தை விஷூ நமக்கு நினைவூட்டுகிறது. சமுதாய ஒற்றுமை முன்பை விட மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த காலகட்டத்தில்  அன்புடனும் சகோதரத்துவத்துடனும்  நிறைந்த மனதுடன் விஷூவை ஒன்றாகக் கொண்டாடுவோம்.

ALSO READ |  கேரளாவில் விஷு பண்டிகை கோலாகலம்... அதிகாலை முதலே பக்தர்கள் சுவாமி தரிசனம்

கோவிட் தொற்றுநோயால் உருவாக்கப்பட்ட நெருக்கடியைக் கடந்து கேரளா ஒரு புதிய முன்னேற்றத்திற்குத் தயாராகி வருகிறது. நாட்டின் விரிவான மற்றும் அனைத்து வகை நலன் மற்றும் வளர்ச்சியை உறுதி செய்வதற்காக நாம் ஒற்றுமையுடன் கைகோர்ப்போம். விஷூ வாழ்த்துக்கள்  ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொண்டு, பிரகாசமான புதிய யுகத்திற்கு  முன்னேறுவோம் என கூறியுள்ளார்.

Published by:Sankaravadivoo G
First published:

Tags: Kerala CM Pinarayi Vijayan, Pinarayi vijayan