சோதனையும் இல்லை கண்காணிப்பும் இல்லை.. குமரி வழியாக தமிழகம் வரும் கேரளமக்கள்- கொரோனா பரவும் அபாயம்

தமிழக கேரள எல்லைப்பகுதி

தமிழக - கேரள எல்லையில் அதிகாரிகளின் அலட்சியத்தால் குமரி வழியாக தமிழகம் வரும் கேரள மக்களால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

 • Share this:
  எந்தவித சோதனையும் இல்லாமல் சோதனை சாவடிகள் வழியாக கேரளாவில் இருந்து தமிழகம் வந்து செல்லும் வாகனங்கள்.

  கேரளாவை ஒட்டிய எல்லை மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்த தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக குமரி மாவட்டத்தின் எல்லை பகுதிகளில் உள்ள  பல்வேறு சோதனை சாவடிகள் வழியாக தமிழகத்திற்குள் எந்த வித சோதனையும் இல்லாமல் தினசரி ஆயிரக்கணக்கான  வாகனங்கள் வந்து செல்வதால் தமிழகத்தில் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

  கேரளாவில் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்று. அங்கு கட்டுக்குள் வராமல் தொற்று பரவி வரும் நிலையில் தமிழக கேரள எல்லை பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் குமரி மாவட்டத்தில் 37 எல்லை  வழிதடங்கள்  3 முக்கிய எல்லை பகுதிகளில் மட்டுமே அடிக்கடி  கண்காணிப்பில் ஈடுபடுவதாலும்  மாவட்டத்தில் உள்ள பல எல்லை பகுதிகள் வழியாக எந்த சோதனையும் இன்றி தமிழகத்துக்குள் வரும் கேரள மக்களால் தமிழகத்திலும் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

  Also Read:  காதலியின் திருமணத்தை நிறுத்த ஆசிட் வீசிய இளைஞர் - ஆம்பூரில் நடந்த பயங்கரம்

  இந்தியாவிலேயே அதிக தொற்று உறுதி செய்யும் மாநிலம் கேரள மாநிலம். இங்கு தினசரி கொரோனா தொற்று எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இன்றி அதிகரித்து வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக கடந்த மாதம் 25-ம் தேதி முதல் தினசரி தொற்று உறுதி செய்பவர்கள் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியது. இந்த நிலையில் தமிழக கேரள எல்லை பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.  குமரி மாவட்டத்தில்  தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு வந்து செல்ல 37 எல்லை வழிதடங்கள் உள்ளது. இதில் மூன்று முக்கிய எல்லை பகுதிகளான காக்காவிளை, களியக்காவிளை, நெட்டா ஆகிய மூன்று எல்லை பகுதிகளில் காவல்துறை மற்றும் சுகாதாரத்துறை சார்பில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் இந்த சோதனை சாவடிகளிலும் முறையாக தொடர்ந்து சோதனை நடைபெறவில்லை என பொது மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

  Also Read: பிக் பாஸில் ஜி.பி.முத்து.. கதறும் ரசிகர்கள்

  அதே போல இரு மாநில எல்லைகளில் பேருந்துகளில் வந்து ஆட்டோ மூலமாகவும் , நடந்தும் எல்லை தாண்டி வந்து செல்கின்றனர். நடந்தும் ஆட்டோவில் வரும் பயணிகளை அதிகாரிகள் கண்காணிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கேரளாவில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் மக்கள் மாவட்டத்தில் மீதியுள்ள கண்ணுமாமூடு, செறியகொல்லா, புலியூர் சாலை, படந்தாலுமூடு, கோழி விளை, ஆறுகாணி, செறுவாரக்கோணம், ஊரம்பு உட்பட பல்வேறு பகுதிகள் வழியாக தமிழகத்துக்குள் நுழைந்து வருவதால் கேரளாவில் இருந்து தமிழகதத்தில் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளது.

  இதுபோல் தற்போது சோதனை நடைபெறும் நெட்டா சோதனை சாவடியில் காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை மட்டுமே சோதனை நடைபெறுகிறது. இதனால் இந்த பகுதி வழியாகவும் எந்த கட்டுப்பாடுகள் இல்லாமலும் ஏராளமான மக்கள் தமிழகம் வருகின்றனர். தமிழகத்தில் தற்போது கொரோனா கட்டுக்குள் இருப்பதால் சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில் கேரளாவில் இருந்து ஏராளமான மக்கள் தமிழகத்தில் சுற்றுலா வந்து செல்கின்றனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  தமிழகத்திற்கு வரும் பயணிகள் இரண்டு தடுப்பூசி போட்ட சான்றிதழ், அல்லது RTPCR நெகட்டிவ் சான்றிதழ் E பாஸ் வைத்திருக்கவேண்டும். ஆனால் முறையான கண்காணிப்பு இல்லாத நிலையில் எவ்வித சோதனையும் இல்லாமல் ஏராளமான கேரள மக்கள் தினசரி வந்து செல்கின்றனர். இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவும் அபாயம் இருப்பதால் அனைத்து எல்லை பகுதிகளிலும் முறையான கண்காணிப்பு நடத்தி தமிழகத்தில் தொற்று பரவுவதை தடுத்து நிறுத்தவேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

  இது குறித்த வருவாய் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது காவல்துறை , சுகாதாரத்துறை, வருவாய் துறை போன்ற அனைத்து துறைகளில் இருந்தும் அதிக அளவில் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளை நியமித்தால் மட்டுமே அனைத்து சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளார்.

  செய்தியாளர்:  சஜ்ஜய குமார் (கன்னியாகுமரி)   உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: