மருத்துவகுணம் கொண்ட பனை ஓலை தொட்டிலுக்கு குமரியில் மவுசு அதிகரிப்பு

மருத்துவகுணம் கொண்ட பனை ஓலை தொட்டில் குமரியில் டிரெண்டிங்!

மருத்துவகுணம் கொண்ட பனை ஓலை தொட்டிலுக்கு குமரியில் மவுசு அதிகரித்து காணப்படுகிறது.

 • Share this:
  தமிழகத்தின் மரமான பனைமரத்தின் ஒவ்வொரு பாகங்களும் வீணாகமல் மக்கள் பயன்படும் வகையிலும், மருத்துவதன்மை கொண்டதாகவும் வாழ்கையின் உணவு, உறக்கத்திற்கு தேவையானதாகவும் உள்ளது.

  உடல் சோர்வு, வாதம், தசைபிடி, எலும்பு தேய்வு உட்பட பல்வேறு உடல், மனம் சம்பந்தப்பட்ட நோய்களை தீர்க கூடிய தன்மைகொண்ட பனைமரத்திலிருந்து கிடைக்கும் பனை ஓலை மூலம் பால்மா மக்கள் அமைப்பு சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள மருத்துவ குணம் கொண்ட தொட்டில் குமரி மக்களிடையே பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.

  நவீன யுக வளர்ச்சியால் சந்தைகளில் பல்வேறு கலை அம்சங்களை கொண்ட தொட்டில்கள் விற்பனையில் இருந்தாலும், அதன் பயன்பாடுகள் குறைய துவங்கி, மருத்துவகுணம் கொண்ட பனை ஓலை தொட்டில்கள் பயன்பாடு குமரி மாவட்டத்தில் அதிகரித்து காணப்படுகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.  குழந்தைகளின் உடல் நலன் கருதி பெற்றோர்கள் இந்த பனை ஓலை தொட்டிலை விரும்பி வாங்குவதால் இந்த தொட்டிலுக்கான மவுசும் மாவட்டத்தில் அதிகரித்துள்ளது.

  செய்தியாளர் - சஜய குமார்
  Published by:Esakki Raja
  First published: