நியூஸ் 18 செய்தி எதிரொலியால் இரு கைகளை இழந்து போராடும் குமரியை சேர்ந்த இளைஞருக்கு மருத்துவர் ஒருவர் உதவிக்கரம் நீட்டியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் பட்டதாரி இளைஞர் மதன்(32). இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் நடந்த விபத்தில் சிக்கி 12 அறுவை சிகிட்சைக்கு பின் இரண்டு கைகளையும் இழந்த போதும் தன்னம்பிக்கையுடன் குடும்ப வறுமையை போக்க போராடி வருகிறார்.
மதனுக்கு செயற்கைக் கை பொருத்த 15 லட்சம் ரூபாய் தேவைப்படும் நிலையில், அவர் உதவி கோரியதை, நியூஸ்18 தமிழ்நாடு செய்தி தொகுப்பு வெளியிட்டது. அதன் எதிரொலியாக மதனுக்கு நுரையீரல் அறுவை சிகிட்சை இலவசமாக மேற்கொண்ட ஈத்தாமொழி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர் டாக்டர் சிவக்குமார் ரூ.1 லட்சத்திற்கான காசோலையையும் மதனிடம் வழங்கினார்.
மனச்சோர்வை தவிர்க்கும் வழிகள் என்ன..? அதை எப்படி கையாள வேண்டும்..? விளக்குகிறார் சத்குரு
செயற்கைக் கை பொருத்த மேலும் ரூ.15 லட்சம் எதிர்பார்த்து காத்திருக்கும் மதனுக்கு பண உதவி செய்ய விரும்புபவர்கள், அவரது வங்கி கணக்குக்கு நேரடியாக பணம் செலுத்தி உதவலாம்.
மதன்,
இந்தியன் வங்கி - மீனாட்சிபுரம் கிளை - 01383,
அக்கவுண்ட் நம்பர் - 6528008587இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.