ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கலவரத்தை தூண்டும் வகையில் பேச்சு: நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளர் சாட்டை முருகன் மீண்டும் கைது

கலவரத்தை தூண்டும் வகையில் பேச்சு: நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளர் சாட்டை முருகன் மீண்டும் கைது

சாட்டை துரைமுருகன்

சாட்டை துரைமுருகன்

கூட்டத்தில் பேசிய யூ டியூபர் சாட்டை துரைமுருகன்,  தமிழக முதலமைச்சர் குறித்து தனிப்பட்ட முறையில் அவதூறு கருத்துகளை தெரிவித்தார்.  தமிழகத்தில் கலவரத்தை தூண்டும் வகையில் அவர் பேசினார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் நேற்று அனுமதியின்றி நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில், தமிழகத்தில் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியது, முதல்வரையும், தமிழக அரசையும் அவதூறாக பேசியது தொடர்பாக அக்கட்சியின் ஆதரவாளர் சேர்ந்த  சாட்டை  துரை முருகன் கைது செய்யப்பட்டார்.

  கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைகளை சட்ட விரோதமாக உடைத்து கனிமவளங்களை கேரளாவிற்கு கடத்துவதை கண்டித்து  தக்கலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய யூ டியூபர் சாட்டை துரைமுருகன்,  தமிழக முதலமைச்சர் குறித்து தனிப்பட்ட முறையில் அவதூறு கருத்துகளை தெரிவித்தார்.

  இதேபோல், தமிழகத்தில் கலவரத்தை தூண்டும் வகையிலும் அவர் பேசினார். இது தொடர்பான புகாரில் சாட்டை துரைமுருகனை போலீசார் இன்று கைது செய்தனர். சாட்டை முருகன் பத்மநாபபுரம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் தீன தயாளன் முன் ஆஜர் படுத்தப்பட்டார். அவரை வரும் 25 - ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவு. அதனை தொடர்ந்து நாங்குநேரி சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். சாட்டை துரைமுருகன் மீது 143, 153, 153A, 505 (2),506(1), 269 ஆகிய ஏழு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க: வாக்காளருக்கு கவரிங் நகை கொடுத்து ஏமாற்றிய வேட்பாளர்!

  மீண்டும் கைது

  திருச்சி மாநகரம் கே.கே.நகரில் உள்ள கார் பழுது நீக்கும் மைய உரிமையாளர் வினோத் என்பவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் குறித்து விமர்சித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டதற்காக சாட்டை முருகன் அவரை மிரட்டியதாக ஏற்கனவே கைது செய்யப்பட்டார்.

  அந்த வழக்கில் இருந்து ஜாமீன் பெற்ற பின்னர், அமைச்சர் செந்தில்பாலாஜியை மணல் கடத்தலோடு தொடர்பு படுத்தி  அவதூறாக பேசியதாக பதியப்பட்ட வழக்கில் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.  இந்த வழக்கிலும் ஜாமீன் கிடைத்து 55 நாட்களுக்கு பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

  இதையும் படிக்க: தமிழகத்தில் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே கொரோனா பாதிப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

  செய்தியாளர்: சஜயகுமார்

  Published by:Murugesh M
  First published:

  Tags: Naam Tamilar katchi, Seeman