Home /News /tamil-nadu /

மு.க.ஸ்டாலின், எம்.ஜி.ஆர். குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு வீடியோ... அரசு ஊழியர் கைது

மு.க.ஸ்டாலின், எம்.ஜி.ஆர். குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு வீடியோ... அரசு ஊழியர் கைது

சஜிகுமார் கைது

சஜிகுமார் கைது

Kanyakumari : திராவிட இயக்கத் தலைவர்களை சமூகவலைத்தளங்களில் அவதூறாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்ட அரசு ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்த சஜிகுமார் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். உள்ளிட்ட தலைவர்கள் குறித்து சமூக ஊடகங்களில் அவதூறாக வீடியோ பதிவிட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

குமரி மாவட்டம் கொல்லங்கோடு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சூழால் சங்குருட்டி பகுதியைச் சேர்ந்தவர் சஜிகுமார் 45 வயதுடைய இவர், முன்னாள் ராணுவ வீரர் ஆவார். இவர் தற்பொழுது தென்காசி மாவட்டம் ஆதிதிராவிட நலத்துறையில் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவர் திராவிட இயக்கத் தலைவர்களான கருணாநிதி, எம்.ஜி.ஆர். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திராவிட கழகத் தலைவர் வீரமணி உட்பட பல்வேறு திராவிட இயக்கத் தலைவர்களை அவதூறாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

இவர் இதுபோன்று பல வீடியோக்களை பதிவிட்டதாக தெரிகிறது. சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பி, மக்கள் மத்தியில் மோதலை உருவாக்குபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்திருந்தார்.

சஜிகுமார்


Must Read : 13 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற கிடா முட்டு திருவிழா... ஆக்ரோஷமாக மோதிக் கொண்ட கிடாக்கள்!

இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் அவதூராக பதிவிட்ட ஓட்டுநர் சஜிகுமார் மீது கொல்லங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தென்காசியில் இருந்த அவரை கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து, அவர் குமரி மாவட்டத்திற்கு கொண்டு வந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.
Published by:Suresh V
First published:

Tags: Arrested, Kanyakumari, MGR, MK Stalin

அடுத்த செய்தி