• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • இலவச பேருந்து பயணத்திற்காக பெண் வேடமணிந்து பயணித்த யூட்டியூப்பர் : வைரலாகும் குறும்படம்

இலவச பேருந்து பயணத்திற்காக பெண் வேடமணிந்து பயணித்த யூட்டியூப்பர் : வைரலாகும் குறும்படம்

 பெண்வேடம் அணிந்த யூட்டியூப்பர்

பெண்வேடம் அணிந்த யூட்டியூப்பர்

பேருந்தில் ஏறி இலவச பயண சீட்டை நடத்துனரிடம் பெற்று கொண்டு அந்த நடவடிக்கைகளை ரகசிய கேமராக்கள் மூலம் படமாக்கி இருக்கிறார்.

  • Share this:
    அவ்வை சண்முகியின் அல்டாரா சேட்டைகள் போல்,
    இலவச பேருந்து பயணத்திற்காக பெண்வேடமணிந்து, கன்னியாகுமரியைச் சேர்ந்த இளைஞர் யூட்டியூப்பர் சர்ஜின் பயணம் செய்யும் குறும்படம் வைரலாகி வருகிறது.

    தமிழக அரசு பெண்கள் பேருந்தில் இலவச பயணம் செய்ய அறிவித்து பல பெண்கள் அந்த இலவச பயணத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை பகுதியை சேர்ந்த யூட்டூப்பர் சர்ஜின் என்ற இளைஞர்  ஒரு குறும்படம் எடுத்துள்ளார்.

    அந்த குறும்படத்தில் சர்ஜின் என்ற அந்த இளைஞர் பெண் வேடமணிந்து இலவசமாக பயணம் செய்யும்போது நடத்துனர் மற்றும் ஆண்களின் நடவடிக்கைகள் குறித்து வெளிபடுத்தும் வகையிலும் ஆண்களுக்கு இலவச பயணம் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தை வெளிபடுத்தும் வகையிலும் இந்த படம் அமைந்துள்ளது.

    இந்ந படத்தில் முழு முகசவரம் செய்துபுடவை அணிந்து சர்ஜின் பெண்வேடத்தில் பஸ் ஸ்டாப்பிங் ஒன்றில் பேருந்திற்காக காத்திருந்து, பேருந்தில் ஏறி இலவச பயண சீட்டை நடத்துனரிடம் பெற்று கொண்டு அந்த நடவடிக்கைகளை ரகசிய கேமராக்கள் மூலம் படமாக்கி கொண்டு இரண்டு நிறுத்தம் தாண்டியதும் நான் பெண் அல்ல ஆண் என நடத்துனரிடம் கூறி பணம் கொடுத்து  பயண சீட்டை பெற்று கொண்டு பேருந்தில் இருது இறங்குகிறார்.

    அடுத்ததாக மார்தாண்டம் பேருந்து நிலையம் வந்து பொது இடத்தில், திடீரென ஒரு பெண் ஆட்டம் போட்டால் பொதுமக்கள் ரியாக்ஷன் எப்படி இருக்கும் என நடனமாடி வீடியோவாக பதிவு செய்துள்ளார். அடுத்ததாக, முழு புடவை உடுத்தி பெண் புல்லட் ஓட்டினால் பப்ளிக் ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்பதை  பற்றியும் மொத்தம் 12 நிமிடம்  ஓடும் வகையில் காட்சிகள் அந்த படத்தில் பதிவு செய்துள்ளனர்.

    பெண்வேடம் அணிந்த யூட்டியூப்பர்


    அந்த குறும்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பல வரவேற்பு மற்றும் கமெண்டுகளை பெற்று வருகிறது. இந்த குறும்படத்திற்காக புடவை, பிளவுஸ் உட்பட பொருட்களை டெக்ஸ்டைல்ஸ் கடையில் இருந்து வாங்கும் காட்சிகளும் காட்சியாக்கபட்டுள்ளது. இந்த காட்சிகள் அனைத்தும் அவ்வை சண்முகி படம் பார்ப்பதை போல உள்ளது.

    Must Read : 21 நாட்களாக போக்குகாட்டிய T23 புலி மசினகுடியில் பிடிபட்டது!

    இவர் பெட்ரோல் விலை உயர்வை சுட்டி காட்டி நுங்கு வண்டி ஓட்டி உருவாக்கிய குறும்படம் உட்பட பல குறும்படங்கள் வைரலானது குறிப்பிடதக்கது.

    செய்தியாளர் - சஜய் குமார், கன்னியாகுமரி.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: