உக்ரைன் - ருமேனியா எல்லையில் சிக்கியுள்ள தங்களது பிள்ளைகளை மீட்டுத் தருமாறு
கன்னியாகுமரியை சேர்ந்த பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர்மல்க மனு அளித்துள்ளனர்.
உக்ரைன் நாட்டில் போர் தீவிரமடைந்து வருவதையடுத்து அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. அங்குள்ள தமிழக மாணவர்கள் விமானம் மூலமாக மீட்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தற்போது நூற்றுக்கணக்கான தமிழக மாணவர்கள் சொந்த ஊருக்கு திரும்பிய வண்ணம் உள்ளனர் .இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 200 மேற்பட்ட மாணவ மாணவியர்கள் உக்ரைன் நாட்டில் உள்ள பல்வேறு பல்கலை கழகங்களில் மருத்துவ கல்வி படித்து வந்த தகவலும் வெளியாகியுள்ளது. அவர்களை மீட்க வேண்டும் என்று அவரது பெற்றோர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.
இதையும் படிங்க -
உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட 20 தமிழக மாணவர்கள்
கன்னியாகுமரி குண்டல் பகுதியை சேர்ந்த இரண்டு மருத்துவ மாணவிகளின் தந்தை இன்று நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர். அதில், தனது மகள் கிரேஸ்ஸ்ட்லின் மற்றும் அபர்னா ஸ்வீட்டி உக்ரைன் வினிசியா பகுதியில் மருத்துவ படிப்பு ஆறாம் ஆண்டு படித்து வருகிறார். தற்போது அங்கு போர் நடைபெற்று வருவதை அடுத்து எனது மகள் அவர்கள் தோழிகளுடன் உக்கரைனில் இருந்து புறப்பட்டு ருமேனியா பகுதிக்கு வந்துள்ளார்.
ருமேனியா எல்லைப் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக தவித்து வருகிறார். எல்லை மூடப்பட்டுள்ளதால் அவர் அங்கிருந்து வெளியேற முடியாத நிலை உள்ளது. இந்திய தூதரக அதிகாரிகளின் வழிகாட்டிதலின் படி உக்ரைன் நாட்டில் மருத்துவ கல்வி படித்து வரும் மாணவியர்கள் அந்த நாட்டின் எல்லைலயில் வந்து இரண்டு நாட்களாக எல்லையை கடக்க முடியாமல் சாலையில் தவித்து வரும் தன் மகள்களை காப்பாற்றி இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறி நாகர்கோவிலில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க இரு பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தது உள்ளனர் .
அந்த நாட்டின் எல்லையில் இந்திய மீட்பு குழுவினர் இல்லாததால் மாணவியர்களுக்கு உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளதாக கவலை தெரிவித்து உள்ளனர். எல்லையில் 3000 திற்கு மேற்பட்ட இந்திய மாணவ மாணவியர்கள் குவிந்து இருப்பதாக பெற்றோர்கள் தகவல் தெரிவித்தனர்.
செய்தியாளர் : ஐ. சரவணன், நாகர்கோவில்உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.