ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மதுபோதையில் மகன் அட்டகாசம்.. மனவேதனையில் தாய் தந்தை தீக்குளித்து தற்கொலை

மதுபோதையில் மகன் அட்டகாசம்.. மனவேதனையில் தாய் தந்தை தீக்குளித்து தற்கொலை

தற்கொலை செய்துக்கொண்ட தம்பதி

தற்கொலை செய்துக்கொண்ட தம்பதி

Kanyakumari | மகனின் அட்டகாசத்தால் தாய் தந்தை தீக்குளித்து தற்கொலை

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே, மது போதையில் மகனின் அட்டகாசத்தால் தாய் தந்தை   தீக்குளித்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

  கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மேலகிருஷ்ணன்  புதூர், சீயோன்நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வ ஜெயசிங்( வயது 68) அவரது மனைவி  தங்கம் (வயது 65). இவர்களுக்கு சதீஷ்,  இயேசு ஜெபின் என்ற இரு மகன்கள் உள்ளனர். இதில் சதீஷ்  திருமணமாகி அருகாமையில்  குடும்பத்துடன் வசித்து வருகிறார். இயேசு ஜெபின்(வயது32) திருமணம் ஆகாத நிலையில்  தாய் தந்தையுடன் வசித்து வந்துள்ளார்.

  Also Read: 5 லட்சம் கடனுக்கு 17 லட்சம் வட்டி - கந்துவட்டி கொடுமையால் நிதிநிறுவன மேலாளர் தற்கொலை

  கடந்த 4 ஆண்டுகளாக  தந்தை செல்வ ஜெயசிங்  பக்கவாதம் நோயால் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கூலித்தொழில் செய்யும் 2-வது மகன்  இயேசு ஜெபின் அடிக்கடி  மது போதையில்,  தனக்கு  திருமணம் செய்து வைக்கக்கோரி தாய் தந்தையை துன்புறுத்தியும் வீட்டில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கியும்  வந்துள்ளார்.

  நேற்றும் இதேபோல் அட்டகாசத்தில் ஈடுபட்டதால் மன உளைச்சலுக்கு ஆளான செல்வ ஜெயசிங் மற்றும் தங்கம் தன்னுடைய மூத்த மகனான சதீஷ்க்கு தொலைபேசியில், இருவரும் இதற்கு மேல் உயிருடன் இருக்க விரும்பவில்லை என  தகவல் கூறிவிட்டு, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதுகுறித்து சுசீந்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து  போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  செய்தியாளர்: ஐ.சரவணன்  (நாகர்கோவில்)   

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Commit suicide, Crime News, Kanyakumari