ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மதுபோதையில் புதுமாப்பிள்ளை குத்திக்கொலை - கன்னியாகுமரியில் அதிர்ச்சி

மதுபோதையில் புதுமாப்பிள்ளை குத்திக்கொலை - கன்னியாகுமரியில் அதிர்ச்சி

கன்னியாகுமரி கொலை

கன்னியாகுமரி கொலை

கன்னியாகுமரியில் திருமணமான மூன்றே மாதத்தில் வாலிபர் கொலையான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  கன்னியாகுமரி  அருகே மது போதையில்  ஏற்பட்ட தகராறில் புதுமாப்பிளை குத்தி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தப்பியோடிய நபரை கன்னியாகுமரி போலீசார் தேடி வருகின்றனர். 

  கன்னியாகுமரி அருகே சகாய மாதா தெருவைச் சேர்ந்தவர் கவாஸ்கர் 37 இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். திருமணமாகி மூன்று மாதங்களே ஆன நிலையில் நேற்று இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கன்னியாகுமரியில் உள்ள ஒரு தனியார் விடுதி அருகே உள்ள ராஜா என்பவரது வீட்டில் மது அருந்தி உள்ளார். அப்போது ராஜா என்பவருடன்  போதையில் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தகராறு கைகலப்பாக மாறியதில்  ராஜா தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு கவாஸ்கர் கழுத்தில் குத்தியுள்ளார்.

  Also Read: வால்பாறை சத்துணவு கூடத்தில் குட்டியானை சடலம்.. வனத்துறை தீவிர விசாரணை

  இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த கவாஸ்கரை அப்பகுதியினர்  மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார்  உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  இதற்கிடையே கொலை செய்துவிட்டு தப்பியோடிய ராஜாவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். திருமணமான மூன்றே மாதத்தில் வாலிபர் கொலையான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக கன்னியாகுமரி சரகத்தில் கஞ்சா மற்றும் போதை பொருட்களின் புழக்கம்  அதிகரித்து வருவதும் குறிப்பிடதக்கது.

  செய்தியாளர் : ஐ.சரவணன்  (நாகர்கோவில்)     

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Crime News, Death, Kanyakumari, Murder