• HOME
 • »
 • NEWS
 • »
 • tamil-nadu
 • »
 • பிஸி டோனால் வந்த வினை... மனைவியின் நடத்தையில் சந்தேகம்.. கழுத்தறுத்து கொலை செய்த கணவன் - குமரியில் நடந்த கொடூரம்

பிஸி டோனால் வந்த வினை... மனைவியின் நடத்தையில் சந்தேகம்.. கழுத்தறுத்து கொலை செய்த கணவன் - குமரியில் நடந்த கொடூரம்

கொலை செய்யப்பட்ட உமா

கொலை செய்யப்பட்ட உமா

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே மனைவியின் நடந்தையில் சந்தேகம் அடைந்த  கணவர் மனைவியின் கழுத்தை அறுத்து படுகொலை செய்துள்ளார்.

 • Share this:
  கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் பள்ளி படிப்பை முடிக்காத 42-வயதான இவர் வெள்ளிச்சந்தை பகுதியில் வாகனங்களுக்கு சீட் கவர் செய்யும் கடை ஒன்றை நடத்தி வருகிறார் இவருக்கும் பக்கத்து ஊரான ஈத்தங்காடு கிராமத்தை சேர்ந்த மாதவன்-யசோதா தம்பதியரின் மகளான 33-வயதான உமா என்பவருக்கும் கடந்த 12 வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு 11-வயதில் ஒரு மகனும் 9-வயதில் ஒரு மகளும் உள்ளனர். கணவர் ரமேஷ் கடை நடத்தி வரும் நிலையில் டெய்லரிங் படித்த உமா வீட்டிலேயே இருந்து தெரிந்த நபர்களுக்கு துணி தைத்து கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

  இதன் காரணமாக வீட்டிற்கு அடிக்கடி வெளி நபர்கள் வரும் நிலையில் ரமேஷ்-க்கு மனைவியின் நடத்தை மீது சந்தேகம் எழுந்துள்ளது. எனவே கடந்த சில வருடங்களாக மனைவியை துன்புறுத்தி கொடுமைபடுத்தி வந்துள்ளார். இதனால் உமாவின் பெற்றோர் பிரச்சனைக்கு தீர்வு காண தங்களது கிராமமான ஈத்தங்காட்டில் ரமேஷ் பெயரில் இடம் வாங்கி வீடு ஒன்றை கட்டி குடியமர்த்தியுள்ளனர். அந்த வீட்டிலும் உமா தனது டெய்லரிங் பணியை தொடர்ந்துள்ளார். தன்னிடம் துணி தைக்க வருபவர்களிடம் செல்போனில் பேசுவதும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப விதவிதமான மாடல்களில் யு-டியூப் பில் பார்த்து அந்த மாடல்களை வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ் ஆப்பில் அனுப்பி வைத்து அவர்களிடம் செல்போனில் பேசியும் தனது பணியில் தீவிரம் காட்டி வந்துள்ளார்.

  Also Read: குழந்தைகளை நோக்கி ஏன் ஏவுகணைகள் அனுப்பி கொலை செய்கிறீர்கள் - உடைந்து அழும் 10 வயது காசா சிறுமி

  இந்த சமயத்தில் ரமேஷ் தனது செல்போனில் இருந்து அடிக்கடி மனைவியின் செல்போன்க்கு தொடர்பு கொள்ளும் போது அவர் "வேறு நபரிடம் தொடர்பில் உள்ளார்" என செல்போன் சர்வரால் கூறப்படும் வாய்ஸ் டோணை உண்மை என நம்பி உடனடியாக வீட்டிற்கு வந்து நீ யாருடன் தொடர்பில் இருக்கிறாய் என கேட்டு தகராறு செய்வதும் பின் செல்வதும் தொடர் கதையாக இருந்துள்ளது. செல்போனில் நாம் ஒருவரை அழைக்கும் போது மறு முனையில் உள்ளவர் யாரிடமாவது பேசி கொண்டிருந்தால் இது போல வரும் என குடும்பத்தார் விளக்கியும்  ரமேஷ் மனம் ஏற்க மறுத்துள்ளது.  இதனால் ஒரு கட்டத்தில் வீட்டிலேயே காவலாளியாக முடங்கிய ரமேஷ் மனைவியை வேவு பார்க்கும் செயலில் ஈடுபட்டுள்ளார். வீட்டிற்கு பால் கொண்டு வருபவர்கள் உட்பட அனைவர் மீதும் சந்தேகமடைந்த ரமேஷ் தனது வீட்டை சுற்றி வீட்டை மறைக்கும் அளவிற்கு ஆளுயர காம்பவுண்ட் சுவர் கட்டியதோடு மனைவியையும் வெளியே அனுப்பாமல் வீட்டு சிறையிலேயே வைத்துள்ளார்.

  இதனால் மனவேதனை அடைந்த உமா கடந்த நான்கு மாதங்களுக்கு முன் கணவனுக்கு தெரியாமல் தனது குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். மனைவி வீட்டை விட்டு சென்ற நிலையில் மனைவியை கடந்த ஒரு மாதத்திற்கு முன் ஊரார் முன்னிலையில் சமாதானம் பேசி அழைத்து வந்த ரமேஷ் நல்லவர் போல் நடித்து அன்பாக இருந்து வந்ததாக தெரிகிறது.

  இந்நிலையில் நேற்று இரவு மனைவி மற்றும் குழந்தைகளை தூங்க வைத்த ரமேஷ் நள்ளிரவு ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த கத்தியை எடுத்து வந்து தனது மனைவியின் கழுத்தை கதற கதற சரமாரியாக அறுத்துள்ளார். கதறல் சத்தம் கேட்டு உமா  பக்கத்தில் தூங்கி கொண்டிருந்த குழந்தைகள் எழும்பி சத்தம் போடவே ரமேஷ் வீட்டை விட்டு வெளியேறி தனது இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றுள்ளார்.

  இதனையடுத்து அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் இரத்த வெள்ளத்தில் கிடந்த உமாவை சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

  இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வெள்ளிச்சந்தை போலீசார் குழந்தைகள் மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். அப்போது உமாவின் மூத்த மகள் நான்கு நாட்களுக்கு முன்பே அப்பா கத்தியை தீட்டி வீட்டின் பின் பக்கம் கொண்டு வைத்தார் எதற்கு என்று தெரியாது என கூற அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.  இதனையடுத்து கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பியோடிய ரமேஷை வலைவீசி தேடி வருகின்றனர்.

  மனைவியின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது "வேறு நபருடன் தொடர்பில் உள்ளார்" என செல்போன் சர்வரால் கூறப்படும் டோணை கேட்டு மனைவியின் நடைத்தை மீது சந்தேகமடைந்து விரக்தியில் மனைவியை கழுத்து அறுத்து கொலை செய்த  சைக்கோ கணவரின் வெறிச்செயல் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  செய்தியாளர்: சஜ்ஜயகுமார், கன்னியாகுமரி

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Ramprasath H
  First published: