Home /News /tamil-nadu /

ரூ.5 லட்சம் தந்தால் வழக்கை முடிக்கிறேன் : லஞ்ச ஒழிப்புத்துறையிடம் வசமாக சிக்கிய டி.எஸ்.பி

ரூ.5 லட்சம் தந்தால் வழக்கை முடிக்கிறேன் : லஞ்ச ஒழிப்புத்துறையிடம் வசமாக சிக்கிய டி.எஸ்.பி

லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சிக்கிய குமரி டி.எஸ்.பி

லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சிக்கிய குமரி டி.எஸ்.பி

Kanyakumari District : 5 லட்ச ரூபாயை டிஎஸ்பி தங்கவேலு லஞ்சம் வாங்கியபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்தனர்.

    கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது  ஐந்து லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கிய மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி தங்கவேலுவை கையும் களவுமாக கைது செய்தனர்.

    கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்தவர் சிவகுரு குற்றாலம். இவர் டெக்ஸ்டைல் தொழில் அதிபராக உள்ளார். இந்நிலையில், அவருக்கும் வேறு ஒருவருக்கும் நிலம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில் பதிவு செய்யப்பட்ட வழக்கை முடித்து வைப்பதற்காக சிவகுரு குற்றாலத்திடம் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி ஐந்து லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

    லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சிக்கிய குமரி டி.எஸ்.பி!


    இதனையடுத்து சிவகுரு குற்றாலம் நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார். பின்னர், லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனையின்பேரில் சிவகுரு குற்றாலம், ஐந்து லட்ச ரூபாயை டிஎஸ்பி தங்கவேலுவிடம் கொடுக்கும் போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக அவரைப் பிடித்தனர்.

    லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சிக்கிய குமரி டி.எஸ்.பி


    Must Read : உதவி பேராசியர் மீது பாலியல், தீண்டாமை புகார்.. ஆதரவாக மாணவிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு : பெரியார் பல்கலைக்கழகத்தில் தொடரும் சர்ச்சை

    இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    செய்தியாளர் : ஐ.சரவணன், நாகர்கோவில்
    Published by:Suresh V
    First published:

    Tags: Arrested, Bribe, Crime News, Kanyakumari

    அடுத்த செய்தி