Home /News /tamil-nadu /

Cannabis smuggling | கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு கஞ்சா கடத்தல்... காவல்துறையிடம் வசமாக சிக்கிய இளைஞர்

Cannabis smuggling | கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு கஞ்சா கடத்தல்... காவல்துறையிடம் வசமாக சிக்கிய இளைஞர்

கஞ்சா கடத்திய இளைஞர்

கஞ்சா கடத்திய இளைஞர்

Cannabis smuggling : விசாரணையில் மணிக்கண்டன் கேரளாவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து சக நண்பர்களுக்கு விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது.

கேரளா மாநிலத்தில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து தனது நண்பர்களுக்கு அதனை விற்பனை செய்த இளைஞர் காவல்துறையினரிடம் வசமாக சிக்கியுள்ளார். தற்போது கைது செய்யப்பட்டுள்ள அவரிடம் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

கன்னியாகுமரி  மாவட்டம் கொற்றிகோடு காவல்நிலைய உதவி ஆய்வாளர் ரசல்ராஜ் தலைமையிலான போலீசார் குமாரபுரம் அருகே அன்னிகுளக்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர் . அப்போது அந்த பகுதியில் கஞ்சா விற்றதாக குமாரபுரம் அருகே படப்பகுளம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் ( வயது 25 ) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவரை கொற்றிக்கோடு காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மணிக்கண்டன் கேரளாவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து சக நண்பர்களுக்கு விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது. மேலும் இது குறித்து தொடர்ந்து அந்த இளைஞரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் கஞ்சா விற்பனை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

அண்மையில் இதே போன்று மதுரை மாவட்டம் பனையூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு நபர்களை காவல்துறை வளைத்துப் பிடித்து கைது செய்தது. பிடிபட்ட இருவரில் ஒருவர் இளம் வயது வாலிபர். மதுரை பனையூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் தனிப்படையினர் சோதனையில் ஈடுபட்டனர்.



அப்போது அப்பகுதியில் சட்டத்திற்குப் புறம்பாக கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. உடனடியாக குற்றவாளிகளைக் கையும் களவுமாக காவல்துறையினர் பிடித்தனர்.

இதே போன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் ரயிலில் 46 கிலோ கஞ்சாவை கடத்திய 3 பேரை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் கைது செய்தனர்.



மயிலாடுதுறை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் பாஸ்கரன், சதீஷ்குமார், சரவணன், பஞ்சவர்ணம், ஆகியோர் திருச்செந்தூர்- சென்னை எக்ஸ்பிரஸ் ரயில்வே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். ரயில் பெட்டியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருந்த பைகளை சோதனை செய்தபோது அதில் பண்டல் பண்டலாக கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து மயிலாடுதுறை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவசங்கர் சத்யா, சரபேஸ்வரன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.



இதே போன்று தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை கடலில் மர்மமான முறையில் மீனவர் வலையில் சிக்கிய கஞ்சா மூட்டைகளை கடலோர காவல்படை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Cannabis, Kanyakumari

அடுத்த செய்தி