ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கன்னியாகுமரியில் கரைபுரளும் வெள்ளம்.. அணைகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றம்

கன்னியாகுமரியில் கரைபுரளும் வெள்ளம்.. அணைகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றம்

கன்னியாகுமரி வெள்ளம்

கன்னியாகுமரி வெள்ளம்

கன்னியாகுமரியில் பெய்து வரும் கனமழையால் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து செல்வதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடரும் மழையால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு.  அணைகளிலிருந்து விநாடிக்கு 11,000 கன அடி தண்ணீர்  வெளியேற்றம். 

  கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக அவ்வப்போது கனமழையாகவும் சில நேரங்களில் மிதமான மழை பெய்து வந்தது. ஆனால் கடந்த மூன்று நாட்களாக கனமழை தொடர்ந்து பெய்து வருவதால்  மலைகளிலிருந்து அணைகளுக்கு அதிகளவில் நீர் வந்த வண்ணம் உளளது. நேற்று அணைகளுக்கு பெருக்கெடுத்த வெள்ளத்தாலும் தொடர் கனமழை காரணமாகவும் அதிக அளவில் நீர் வெளியேற்றப்பட்டது. ஆனால்,  இன்று வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டு முக்கிய அணைகளில் இருந்து வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

  48 அடி கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 45.66 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 10,372 கன அடி தண்ணீர் வந்துகொண்டு இருக்கிறது. வினாடிக்கு 5,033 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு உள்ளது. 77 அடி கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 75.38 அடியாக உள்ளது. வினாடிக்கு 11,280 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. விநாடிக்கு 5,288 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு உள்ளது. 18 அடி கொள்ளளவு கொண்ட  சிற்றாறு -1 அணையில் நீர்மட்டம்  16.24 அடியாக உள்ள நிலையில், அணைக்கு வினாடிக்கு 784 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. வினாடிக்கு 802 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

  Also Read:  வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம்.. 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

  மாம்பழத்துறையாறு அணையில் நீர்மட்டம்  54.12 அடியாக உள்ள நிலையில், அணைக்கு வினாடிக்கு 482 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. வினாடிக்கு 482 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும், சிற்றாறு -2 . பொய்கை அணைகளிலும் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து  வருகிறது.  இதனால் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து செல்வதால் ஏற்கனவே, மாவட்ட ஆட்சியரால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 45 க்கும் மேற்பட்ட முகாம்களில் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த சுமார் 2000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளன.

  Also Read:  மணிப்பூரில் தீவிரவாதிகள் கடும் தாக்குதல்..  ராணுவ அதிகாரி, மனைவி உள்ளிட்ட 7 பேர் உயிரிழப்பு

  தாழ்வான பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் பயிரிட்ட ரப்பர், வாழை, காய்கறி தண்ணீரில் மூழ்கி சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். , இந்நிலையில் இன்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் .கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் அவர்கள், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் .கே.ஆர். பெரியகருப்பன் அவர்கள்,  தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் .மனோ தங்கராஜ் அவர்கள், ஆகியோர், கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று   பார்வையிடுகிறார்கள்.

  செய்தியாளர்: சஜயகுமார் (கன்னியாகுமரி)

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Dams, Flood, Flood alert, Heavy Rainfall, Kanyakumari, Weather News in Tamil