முகப்பு /செய்தி /தமிழ்நாடு / சர்ச் பெயரில் பாலியல் சர்வீஸ் செய்த பாதிரியார்.. போலீசாரிடம் சிக்கியது எப்படி?

சர்ச் பெயரில் பாலியல் சர்வீஸ் செய்த பாதிரியார்.. போலீசாரிடம் சிக்கியது எப்படி?

சர்ச் பெயரில் பாலியல் சர்வீஸ் செய்த பாதிரியார்.. போலீசாரிடம் சிக்கியது எப்படி?

வெளி மாநிலங்களில் இருந்து இளம்பெண்கள் அரைகுறை ஆடைகளுடன் ஆடம்பர கார்களில் வந்து செல்வதாக இருந்துள்ளனர்.

 • News18 Tamil
 • 1-MIN READ
 • Last Updated :

  கன்னியாகுமரி மாவட்டத்தில் தேவாலயம் பெயரில் பாலியல் தொழில் செய்து வந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர் போலீசாரிடம் சிக்காமல் இருக்க தேவாலயம் பெயரில் பாலியல் தொழில் செய்துவந்த கும்பல் சிக்கியது எப்படி?

  பெயர் பலகையில் தேவாலயம், மக்கள் அன்போடு அழைக்கும் மதபோதகர். இப்படி மக்களை நம்பவந்து தேவாலயத்திலையே பாலியல் தொழில் செய்து வந்துள்ளது ஒரு பலே கும்பல். கில்லாடி கும்பல் சிக்கியது எப்படி?

  கன்னியாகுமரி மாவட்டம் எஸ்டி மங்காடு பகுதியை சேர்ந்தவர் 40 வயதான மதபோதகரான லால் ஷைன் சிங் .இவர் அதே பகுதியில் உள்ள தனது மற்றொரு சொகுசு பங்களாவில் பெடரல் சர்ச் ஆப் இந்தியா என்ற பெயரில் தேவாலயம் ஒன்றை நிர்வகித்து வருகின்றார். ஆனால் தேவாலயத்திற்கு அந்த பகுதி மக்களை தவிர பிறபகுதிகளில் இருந்தும் ,கேரள மாநிலத்தில் இருந்தும் இளம் பெண்கள் அரைகுறை ஆடைகளுடன் ஆடம்பர கார்களில் வந்து செல்வதாக இருந்துள்ளனர் அத்துடன் தேவாலயம் பெயரை தவறாக பயன்படுத்தி பாலியல் தொழில் நடைபெறுவதாக நித்திரவிளை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

  Also Read:  அக்காள் கணவருடன் போனில் பேச்சு.. ஆத்திரத்தில் மனைவியை தீர்த்துக்கட்டிய கணவன்

  இதையடுத்து தேவாலயம் பெயரில் உள்ள சொகுசு பங்களாவில் அதிரடியாக புகுந்த பத்திற்கும் மேற்பட்ட போலீசார் திடீரென சோதனை மேற்கொண்டனர். பல அறைகளாக பிரிக்கப்பட்டிருந்த அந்த பங்களாவில் பெண்கள் சிலர் ஆண்களுடன் தனிமையில் இருந்துள்ளனர். இதையடுத்து இரண்டு இளம் பெண்கள் உட்பட மொத்தம் ஏழுபேரை பிடித்த போலீசார் அனைவரையும் காவல் நிலையம் அழைத்து வந்தனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மதபோதகர் போர்வையில் லால் ஷைன் சிங் தேவாலயம் பெயரில் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்தது விசாரணையில் உறுதியானது மேலும் சிக்கிய ஆண்கள் 34 வயதான ஷைன் , 34 வயதான ஷிபின் , என்றும் சிக்கிய பெண்கள் ஞாறான்விளை பகுதியை சேர்ந்த 55 வயதான ராணி , 40 வயதான சுகந்தி என்பதும் தெரியவந்தது.இரண்டு பெண்களும் தேவாலயத்திற்கு வருவது போன்று பாலியல் தொழிலுக்கு இளம் பெண்களை அழைத்து வந்ததுள்ளனர்.

  Also Read:  டெலிவரிபாய் டூ செயின் திருடன்.. மனைவியின் பேராசையால் தடம்மாறிய கணவன்

  அதே போன்று சிக்கிய 19 வயது இளம்பெண்னை அவரது தாயே பாலியல் தொழிலுக்கு தள்ளியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து ஏழு பேரையும் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி சிறையில் அடைத்தனர்

  தேவாலயம் என்ற பெயரில் மதபோதகரே பாலியல் தொழில் செய்து போலீசாரிடம் சிக்கியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

  First published:

  Tags: Christ Church, Crime | குற்றச் செய்திகள், Kanyakumari, Pastor, Prostitution