ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கல்லூரி மாணவியை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டல் - கன்னியாகுமரியை அதிரவைத்த சம்பவம்

கல்லூரி மாணவியை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டல் - கன்னியாகுமரியை அதிரவைத்த சம்பவம்

கன்னியாகுமரி மாணவிக்கு மிரட்டல்

கன்னியாகுமரி மாணவிக்கு மிரட்டல்

கல்லூரி மாணவியை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி கற்பழித்த சம்பவம் கன்னியாகுமரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  ஆபாச படம் எடுத்து கல்லூரி மாணவியை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் தலைமறைவாக  இருக்கும் இரண்டு ராணுவ வீரர்களை  போலீஸார் தேடி வருகின்றனர்.

  கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையை அடுத்த இடைக்கோடு பகுதியைச் சேர்ந்த 19 வயது பெண் அப்பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்த மாணவி ஓய்வு நேரத்தில் மாதச்சீட்டு நடத்தி வந்தார். இதில் அவருக்கு பண நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த  ராணுவ வீரர் சஜித் என்பவரிடம் உதவி கேட்டுள்ளார். அந்த நபர் மாணவிக்கு தேவையான பண உதவி செய்வதாக உறுதி அளித்தார். இதற்காக அடிக்கடி மாணவியுடன் செல்போனில் பேசி வந்துள்ளார்.

  மாணவியுடன் நெருக்கம் அதிகரித்ததை தொடர்ந்து இருவரும் வாட்ஸ்-அப்பிலும் பேசத் தொடங்கினர். அப்போது மாணவியை வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது மாணவியை ஆபாசமாக படம் எடுத்துள்ளார். பின்னர் அந்த படத்தை காட்டி சஜித் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் மாணவியின் படத்தை சக நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளார்.

  இதனையடுத்து மேலும் சிலர் மாணவியை ஆபாச படம் காட்டி மிரட்டத் தொடங்கியுள்ளனர். தங்களுடைய ஆசைக்கு இணங்குமாறு மிரட்டத்தொடங்கியுள்ளனர். இதனால் அச்சமடைந்த மாணவி இதுகுறித்து மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். மாணவி கொடுத்த புகாரின் பேரில்  வழக்குப்பதிவு செய்த போலீஸார் ராணுவ வீரர்களான சஜித், கிரிஷ், ஜாண் பிரிட்டோ ( 33 ),  லிபின் ஜான் ( 32 ) ஆகிய 4 பேர்  மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

  இந்நிலையில் ஜாண் பிரிட்டோ , லிபின் ஜான் ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான ராணுவ வீரர்கள் சஜித் மற்றும் கிரீஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.  சஜித், கிரீஷ் இருவரும் ராணுவ வீரர்கள் என்பதால் அவர்களை கைது செய்ய தனியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மேலும் 2 பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

  செய்தியாளர்: சஜயகுமார் ( கன்னியாகுமரி)

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Crime News, Kanyakumari, Photos, Police, Sexual harassment, Tamil News