• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கணவர், மகன்களை ராணுவத்துக்கு அனுப்பிய பெண்மணிக்கு வீரத்தாய் பதக்கம்!

கணவர், மகன்களை ராணுவத்துக்கு அனுப்பிய பெண்மணிக்கு வீரத்தாய் பதக்கம்!

வீரத்தாய் பதக்கம்

வீரத்தாய் பதக்கம்

இந்த விருதை டெல்லிக்கு வரவழைத்துதான் வழங்குவார்கள். தற்போது, கொரோனா காரணமாக  ராணுவ போர்டு அதிகாரி தன்ஸ்லால், சந்திரிகா தேவியின் வீட்டுக்கே சென்று விருதை வழங்கி கௌரவித்துள்ளார்

  • Share this:
    கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே ஒரே குடும்பத்தில்3 பேர் ராணுவத்தில் பணியாற்றியதை கௌரவிக்கும் வகையில்,பெண்மணிக்கு இந்திய ராணுவம் சார்பில் வீரத்தாய் பதக்கம் வழங்கப்பட்டது.

    கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகேயுள்ள மீனச்சல் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரிகா தேவி (71). இவரது கணவர் தனஜயன்நாயர். ராணுவத்தில் பணியாற்றியவர். இத்தம்பதிக்கு 5 மகன்கள். அவர்களில் வனஜெயன் (3 ஆவது), தவுகித்திரி ஜெயன் (4 ஆவது) ஆகிய இரு மகன்களும் ராணுவத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.

    ஒரே குடும்பத்தில் தந்தை, இரு மகன்கள் ராணுவத்தில் பணியாற்றி நாட்டை காக்கும் பணியில் ஈடுபட்டதை  கௌரவிக்கும் வகையில், குடும்பத் தலைவியான சந்திரிகாதேவிக்கு இந்திய ராணுவம் சார்பில் வீரத்தாய் விருது மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. பொதுவாக இந்த விருதை டெல்லிக்கு வரவழைத்துதான் வழங்குவார்கள். தற்போது, கொரோனா காரணமாக  ராணுவ போர்டு அதிகாரி தன்ஸ்லால், சந்திரிகா தேவியின் வீட்டுக்கே சென்று விருதை வழங்கி கௌரவித்துள்ளார்.

    மேலும் படிக்க: அரசுத் தேர்வு: தேர்வர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!


    இதுகுறித்து சந்திரிகா தேவி கூறுகையில், அரை நூற்றாண்டுக்கு முன் பாகிஸ்தான், சீனா நாட்டுடனான போரில் பங்கேற்ற ராணுவ வீரரான எனது கணவரை திருமணம் செய்து கொண்டேன். பணி ஓய்வுக்குப் பின் 83 ஆவது வயதில் கடந்த டிசம்பர் மாதம் அவர் உயிரிழந்தார். எனது இரு மகன்கள் நாட்டை காக்கும் பணியில் ஈடுபட்டு வருவதை நினைத்து பெருமைப்படுகிறேன். இந்த விருது கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார்.

    செய்தியாளர்: சஜயகுமார்- நாகர்கோவில்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: