• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மழை வெள்ளத்தைக் கொண்டாடித் தீர்க்கும் கன்னியாகுமரி மக்கள்- வைரலாகும் வீடியோக்கள்

மழை வெள்ளத்தைக் கொண்டாடித் தீர்க்கும் கன்னியாகுமரி மக்கள்- வைரலாகும் வீடியோக்கள்

கன்னியாகுமரி மழைவெள்ளம்

கன்னியாகுமரி மழைவெள்ளம்

கன்னியாகுமரி சாலைகள் மழை நீரால் நிரம்பி வழியும் நிலையில் அம்மாவட்ட மக்கள் மழைநீரில் குதித்து கொண்டாடிவருகின்றனர்.

  • Share this:
    கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக அவ்வப்போது கனமழையாகவும் சில நேரங்களில் மிதமான மழை பெய்து வந்தது. ஆனால் கடந்த மூன்று நாட்களாக கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் மலைகளிலிருந்து அணைகளுக்கு அதிகளவில் நீர் வந்த வண்ணம் உளளது. நேற்று அணைகளுக்கு பெருக்கெடுத்த வெள்ளத்தாலும் தொடர் கனமழை காரணமாகவும் அதிக அளவில் நீர் வெளியேற்றப்பட்டது. ஆனால், நீரின் அளவு குறைக்கப்பட்டு முக்கிய அணைகளில் இருந்து வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    48 அடி கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 45.66 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 10,372 கன அடி தண்ணீர் வந்துகொண்டு இருக்கிறது. வினாடிக்கு 5,033 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு உள்ளது. 77 அடி கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 75.38 அடியாக உள்ளது. வினாடிக்கு 11,280 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. விநாடிக்கு 5,288 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு உள்ளது.




    18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு -1 அணையில் நீர்மட்டம் 16.24 அடியாக உள்ள நிலையில், அணைக்கு வினாடிக்கு 784 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. வினாடிக்கு 802 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.



    கன்னியாகுமரியில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக மாவட்டத்தில் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. நகரின் முக்கியச் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இருப்பினும், பல பகுதிகளில் வெள்ள நீரில் மகிழ்ச்சியுடன் விளையாடி வருகின்றனர். வெள்ள நீரில் குதித்து விளையாடுவதும், தேங்கியிருக்கும் மழை நீரில் கைப் பந்து விளையாடுவதும் என்று கன்னியாகுமரி மாவட்ட மக்கள் அலப்பறையைக் கொடுத்துவருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: