உயரதிகாரிகளின் அநீதிக்கு துணை போகாமல் நேர்மையாக பணியாற்றும் தனக்கும் தனது குழந்தைகளுக்கும் உயரதிகாரிகள் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் ஆரம்ப சுகாதார நிலைய பெண் மருத்துவர் வெளியிட்ட வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் சுங்கான்கடை பகுதியை சேர்ந்த பெண் மருத்துவர் டாக்டர் பெமிலா. இவர் முட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.
இவர் ஒரு வருடத்திற்கு முன் முட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியில் இருந்த போது அங்கு நடக்கும் முறைகேடுகளை தட்டி கேட்டதால் உயரதிகாரிகளால் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் பல போராட்டங்களுக்கு இடையே மீண்டும் முட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியில் சேர்ந்தார்.
இந்த நிலையி பெமிலா வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அதில் கன்னியாகுமரி மாவட்ட சுகாதாரத்துறையில் பல்வேறு விதமான ஊழல்கள் நடந்து வருகின்றன என்றும் இதற்கு முக்கிய காரணம் நாகர்கோவில் சுகாதார பணிகள் முன்னாள் துணை இயக்குநர் டாக்டர் மதுசூதனன் என்றும் இவர் 2009 முதல் 2019 வரை தொடர்ந்து 10-வருடங்கள் ஒரே இடத்தில் தனது சொந்த ஊரில் நிர்வாக பணியில் அரசு விதிக்கு மாறாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அவருக்கு துணை போகின்ற வட்டார மருத்துவ அலுவலர்களை ஒவ்வொரு வட்டாரத்திலும் நியமித்துள்ளதாகவும் அவர்களும் 10-வருடங்களுக்கு மேலாக ஒரே இடத்தில் அரசு விதிக்கு மாறாக ஒரே இடத்தில் பணி புரிந்து வருவதாகவும் இவர்கள் மக்களுக்கான அரசு நிதியை போலி ஆவணங்கள் மூலம் கையாடல் செய்து வருவகவும் பெமிலா குற்றம் சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: மூதாட்டியை தாக்கி நகை பறிப்பு.. 150-க்கும் மேற்பட்ட சிசிடிவிகளை ஆய்வு செய்து 3 நாளில் குற்றவாளியை கைது செய்த போலீசார்!
மருத்துவமனைக்கு வராமலே மக்கள் வரி பணத்தில் சம்பளம் பெற்று வருவதாகவும் லஞ்சம் பெற்று கொண்டு மருத்துவ பணியிடத்தை டிரான்பர் என்ற பெயரில் இன்னொரு மருத்துவருக்கு விற்று அதிகார துஷ்பிரயோகம் செய்வதாகவும்
ஒழுங்கான முறையில் சிறப்பாக பணிபுரிந்து உயரதிகாரிகளுக்கு கப்பம் கட்டாத மருத்துவர்களை தொடர்ந்து பல வழிகளில் துன்புறுத்தி வருவதாகவும் அவர் வேதனையோடு கூறியுள்ளார்.
இவர்கள் செய்யும் அநீதிக்கு துணை போகாத தன்னை பெண் மருத்துவர் என்றும் பாராமல் பணி இடத்திற்கு செல்ல விடாமலும் தனக்கும் தனது 6-வயது மற்றும் 3-வயது குழந்தைகளுக்கும் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும்
எனவே முதல்வர் மு.க.ஸ்டாலின் சுகாதார துறையில் நடக்கும் இந்த ஊழல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் பெமிலா கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும் படிக்க: அதிகாரப்பூர்வ வேட்பாளருக்கு எதிராக போட்டி வேட்பாளர்: அதிரடியை தொடங்கிய திமுக.. திருமங்கலம் ,உசிலம்பட்டி நிர்வாகிகள்
மேலும் டாக்டர் மதுசூதனன் மீது லஞ்ச ஒழிப்பு துறை சோதனை மற்றும் சிபிஐ விசாரணை நடத்தி உண்மைகளை கண்டறிய உத்தரவிட வேண்டும் என்றும் வீடியோவில் அவர் வலியுறுத்தியுள்ளார். ஏற்கனவே, கடந்த ஆண்டு தனது உயர் அதிகாரிகளுக்கு எதிராக பெமிலா பாலியல் குற்றச்சாட்டை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்: சஜயகுமார் - கன்னியாகுமரி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Doctor, Kanniyakumari