• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கொள்ளையடித்த பணத்தில் உல்லாச வாழ்க்கை: கள்ள காதல் ஜோடி கைது!

கொள்ளையடித்த பணத்தில் உல்லாச வாழ்க்கை: கள்ள காதல் ஜோடி கைது!

கைது

கைது

யாருக்கு சந்தேகம் வராத நிலையில், அடிக்கடி ஊட்டி சென்ற கள்ளக் காதல் ஜோடி, திருடிய நகைகளை விற்று சொந்தமாக வீடு கட்டி கிரக பிரவேசமும் நடத்தி உள்ளனர்.

  • Share this:
    கன்னியாகுமரி மாவட்டத்தில் உறவினர் வீட்டில் கொள்ளையடித்து ஊட்டியில் உல்லாசமாக இருந்த கள்ள காதல் ஜோடியை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 50 சவரன் தங்க நகைகளையும் மீட்டனர்.

    கன்னியாகுமரி மாவட்டம் சேரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் 44-வயதான பேபிசுதா. நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்க்கும் இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில் பேபிசுதா தனது இரு மகள்களுடன் சேரமங்கலத்தில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்தார்.

    கடந்த ஜனவரி மாதம் 26ம் தேதி பெத்தேல்புரம் பகுதியில் வசிக்கும் தனது தம்பி சுதர் என்பவரின் மனைவி ஷர்மிளா மோள் பேபிசுதாவை விருந்துக்கு அழைக்க பேபிசுதா தனது வீட்டை பூட்டி விட்டு ஷர்மிளாமோள் வீட்டிற்கு சென்றுள்ளார் அங்குள்ள தேவாலய திருவிழாவில் கலந்து கொண்டு விருந்து முடித்து ஜனவரி 28-ம் தேதி பேபிசுதா சேரமங்கலத்தில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பிய போது அவரது வீட்டின் பின்பக்க கதவுகள் மற்றும் அறை கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ந்த அவர் அறையில் உள்ள பீரோவை சென்று பார்த்த போது அதில் இருந்த 50-சவரன் தங்க நகைகள் கொள்ளை போனது தெரிய வந்தது.

    இதுகுறித்து மண்டைக்காடு காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார்.  கொள்ளையர்களை பிடிக்க சப்-இன்ஸ்பெக்டர் ஜாண் போஸ்கோ தலைமையில் தனிப்படை அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவிட்ட நிலையில் தனிப்படை போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர் கட்ந்த 7-மாதங்களாக தனிப்படை போலீசாருக்கு கொள்ளை குறித்து எந்த தடயமும் கிடைக்காத நிலையில் கொள்ளை நடந்த அன்று அந்த பகுதியில் இயங்கிய செல்போன் எண்களை ஆய்வு செய்த போது அந்த பகுதியில் சந்தேகப்படும் படியாக பெத்தேல்புரம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரின் செல்போன் உபயோகத்தில் இருந்ததும் அந்த வாலிபர் செல்போனில் இருந்து பெத்தேல்புரம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரிடம் அடிக்கடி பேசி கொண்டிருந்ததையும் தனிப்படை போலீசார் கண்டுபிடித்தனர்.

    மேலும் படிக்க: 13 வயது சிறுமிக்கு இன்ஸ்டாகிராமில் காதல் வலை - வீடியோ எடுத்து மிரட்டல்


     அந்த வாலிபரையும் அவருடன் இருந்த இளம்பெண்ணையும்  பெத்தேல்புரத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.  அவர்களிடம் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் பெத்தேல்புரம் பகுதியை சேர்ந்த 27 வயதான ஏரோ நாட்டிக்கல் இன்ஜினியரான பபின் என்பதும் ஆஸ்திரேலியாவில் வேலை பார்த்து வந்த அவர் கொரோனா நோய் தொற்றால் வேலையிழந்து கடந்த ஒன்றரை வருடத்திற்கு சொந்த ஊருக்கு வந்தது தெரியவந்தது.

    பக்கத்து வீட்டை சேர்ந்த சுதர் என்பவரின் மனைவி ஷர்மிளா மோள் என்பவருடன்  பபினுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.  பின்னர் அவருடன் நெருங்கி பழகி கள்ளதொடர்பை ஏற்படுத்தி அடிக்கடி இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.  ஒரு கட்டத்தில் உல்லாச வாழ்க்கைக்கு பணம் இல்லாத நிலையில் ஷர்மிளாமோள் சேரமங்கலத்தில் வசிக்கும் தனது கணவரின் சகோதரி பேபி சுதா வீட்டில் கொள்ளையடிக்கும் திட்டத்தை பபினிடம் கூறியுள்ளார்.

    அதன்படி,  பேபி சுதாவை கடந்த ஜனவரி மாதம் 26-ம் விருந்துக்காக வீட்டிற்கு அழைத்து ஷர்மிளாமோள் தங்க வைத்த நிலையில் 27-ம் தேதி இரவு திட்டமிட்டப்படி பபின் சேரமங்கலம் சென்று பேபி சுதா வீட்டில் கொள்ளையில் ஈடுபட்டுள்ளார்.   பின்னர் ஷர்மிளா தனது கணவரிடம் வேலைக்கு நேர்முக தேர்வுக்காக சென்னை செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் இருவரும் நகைகளை விற்று ஊட்டியில் சொகுசு வீடு வாடகைக்கு எடுத்து உல்லாசமாக பல நாட்கள் இருந்துள்ளனர்.

    இதையும் படிங்க: மணல் திருட்டில் ஈடுபட்ட பெண்கள்!


    பின்னர்,  சொந்த ஊர் திரும்பிய அவர்கள்,  யாருக்கும் சந்தேகம் வராத நிலையில் அடிக்கடி அதேப்போல் ஊட்டிக்கு சென்று உல்லாசமாக இருப்பதும் தற்போது நகைகளை விற்ற பணத்தில்  சொந்தமாக சொகுசு வீடு ஒன்றை கட்டி கிரக பிரவேசம் செய்ததோடு இருவரும் வெளியூர்களுக்கு செல்லாமல் அந்த வீட்டிலேயே அடிக்கடி தனிமையாக சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    அவர்களிடம் இருந்த தங்க நகைகளை மீட்ட போலீசார், இருவரையும் இரணியல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: