கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே கல்விக்கட்டணம் கட்டமுடியாமல் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே கழுவன்திட்டை ஆர்.சி தெருவை சேர்ந்தவர் ஜஸ்டின். இவரது இரண்டாவது மகள் பிரின்சி ( 19). இவர் மார்தாண்டம் பகுதியில் செயல்படும் சைபர் ஸ்பாட் என்ற தனியார் டிப்ளமோ கல்லூரியில் OPTOMETRY இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார்.
தனது கல்வி கட்டணம் 30 ஆயிரம் ரூபாயை செலுத்த வேண்டும் என்று தாய் தந்தையிடம் பிரின்சி கேட்டுகொண்டு வந்துள்ளார். பல நாட்கள் கேட்டும் வறுமை காரணமாகவும் மூத்த மகளை கடன் வாங்கி திருமணம் செய்து கொடுத்த நிலையில் கல்வி கட்டணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க: தமிழக அலங்கார ஊர்திக்கு ஏன் அனுமதி மறுப்பு: மத்திய அரசு விளக்கம்
இதனால் மனமுடைந்த நிலையில் காணபட்ட பிரின்சி வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் களியக்காவிளை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிரின்சியின் உடலை கைபற்றி குழித்துறை அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
செய்தியாளர்- சஜயகுமார்
தற்கொலை என்பது எதற்கும் தீர்வு அல்ல
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.